நான் மட்டும் இந்தியன் டீம் செலக்டரா இருந்தா நேரடியா இந்த பையன வேர்ல்டுகப் டீமுக்கு செலக்ட் பண்ணுவேன் – ரெய்னா ஆதரவு

Raina
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் தங்களது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் அனைவருமே ஐபிஎல் களத்தில் தங்களது திறனை காட்டும் முனைப்பில் ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமாக விளையாடி வருகின்றனர்.

Yashasvi Jaiswal RR vs KKR

- Advertisement -

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற 56-வது லீக் போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் 150 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் முதலிலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதல் இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்ததோடு சேர்த்து இந்த இன்னிங்ஸில் 47 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 98 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Jaiswal

அதோடு நடப்பு ஐ.பி.எல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 575 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இப்படி போட்டிக்கு போட்டி அசத்தி வரும் ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஜெய்ஸ்வால் குறித்து புகழ்ந்து பேசி உள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால் கண்டிப்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை நேரடியாக உலகக் கோப்பை அணிக்கு தேர்ந்தெடுத்து இருப்பேன். ஏனெனில் இளம் வீரரான அவர் புத்துணர்ச்சியோடு இருப்பதினால் அவர் உலக கோப்பையில் விளையாடுவது நன்றாக இருக்கும். அதோடு வீரேந்திர சேவாக்கு போன்று அவர் அதிரடியாக விளையாடுவது எனக்கு சேவாக்கை ஞாபகப்படுத்துகிறது.

இதையும் படிங்க : CSK : என்னது தோனி அவுட் ஆனதும் நான் செலிபிரேட் பண்ணனா? உண்மையில் நடந்தது இதுதான் – பதிரானா கொடுத்த விளக்கம்

ரோகித் சர்மா கண்டிப்பாக அவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். இனிவரும் காலத்தில் அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement