CSK : என்னது தோனி அவுட் ஆனதும் நான் செலிபிரேட் பண்ணனா? உண்மையில் நடந்தது இதுதான் – பதிரானா கொடுத்த விளக்கம்

Pathirana
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடினால் கிடைக்கும் ஆதரவு போன்றே இந்தியா முழுவதும் இந்த ஆண்டு தோனிக்காக சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டுதான் தோனியை கடைசியாக கிரிக்கெட் களத்தில் பார்க்க முடியும் என்று கூறப்படுவதால் லட்சக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் போட்டியை காண படையெடுத்து வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

அதிலும் குறிப்பாக சென்னை அணி பேட்டிங் செய்யும் போட்டிகளில் கடைசி சில பந்துகளில் மட்டுமே தோனி களத்திற்கு பேட்டிங் செய்ய வருவதால் அப்போது அவருக்கு கொடுக்கப்படும் வரவேற்பு என்பது வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது கரகோஷங்களையும், ஆரவாரங்களையும், விசில்கள் மூலமும், தோனி தோனி என்கிற முழக்கம் மூலமும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியின் போது கூட கடைசி சில பந்துகளில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Dhoni 1

அப்பொழுது தோனி பெவிலியனை நோக்கி நடக்கும்போது ஓய்வறையில் இருந்த சக சென்னை அணியின் இளம் வீரரான மதீஷா பதிரானா அவரை கிண்டல் செய்யும் விதமாக தனது வழக்கமான செலிப்ரேஷன் ஸ்டைலில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இது குறித்த சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் தோனி ஆட்டம் இழந்ததற்காகத்தான் அவர் அப்படி கொண்டாடினாரா? என்பது போன்ற கேள்வியும் எழுந்தது. அதோடு ரசிகர்கள் மத்தியிலும் அவரது இந்த செயலானது விமர்சனத்தை எழுப்பியது. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பதிரானாவும் ஒரு தெளிவான விளக்கம் ஓன்றினை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : என்னை அவுட்டாக்க பந்தே இல்ல – 8 வருடங்கள் கழித்து மும்பைக்காக பெரிய இலக்கை தொட்ட சூரியகுமார்

அதன்படி பதிரானா கூறுகையில் : தோனி ஆட்டமிழந்தது கடைசி ஓவர். அதனால் நான் அடுத்த இன்னிங்ஸில் பந்து வீசுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். நான் தோனி பெவிலியனை நோக்கி வரும்போது செலிப்ரேஷன் எதையும் செய்யவில்லை. அடுத்ததாக நாங்கள் பந்து வீசவேண்டும் என்பதால் வார்ம் அப் செய்து கொண்டிருந்தேன் என்று பதிரானா தெளிவான விளக்கத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement