- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த டி20 உலககோப்பை ஜெயிக்க அந்த பையன் தான் முக்கிய காரணமா இருப்பான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தயாராக உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது பேட்டிங்கில் மிகச் சிறப்பான வீரர்களை கொண்டிருந்தாலும் பந்துவீச்சில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் யாதெனில் இந்திய அணி சமீப காலமாகவே டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி வருவது தான்.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து பும்ராவும் வெளியேறி விட்டதால் இந்திய அணியின் பவுலர்கள் குறித்த வருத்தம் அனைவரது மத்தியிலும் உள்ளது. ஏனெனில் புவனேஸ்வர் குமார் முன்பை போல ரன்களை சிக்கனமாக கொடுத்து வீசாமல் டெத் ஓவர்களில் ரன்களை அதிகளவில் கொடுத்து வருகிறார். அதேபோன்று அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு இந்த தொடரில் செயல்படப்போகிறது என்பது குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரராக இருப்பார் என முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை அவர் கூறுகையில் : எப்போதுமே உலகக்கோப்பை தொடர்களின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நமக்கான அதிர்ஷ்டத்தை அவர் கொண்டு வருவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அணியில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது உண்மையில் அணிக்கு ஒரு பெரிய பலத்தை கொடுக்கும். கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை நாம் வென்ற போது அணியில் இர்பான் பதான் மற்றும் ஆர்.பி சிங் ஆகியோர் இருந்தனர். அதேபோன்று 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை ஜெயிக்கும் போது ஜாகிர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருந்தனர்.

- Advertisement -

அப்படி இந்த டி20 உலக கோப்பையிலும் நம்மிடம் அர்ஷ்தீப் சிங் இருக்கிறார். நமக்கான அதிர்ஷ்டத்தை நிச்சயம் அவர் கொண்டு வருவார். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக அர்ஷ்தீப் சிங் இருப்பார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும் முகமது ஷமி குறித்து பேசிய அவர் : உங்களால் பும்ராவிற்கு நிகரான வீரரை கொண்டுவர முடியாது.

இதையும் படிங்க : நீங்க 2 பேர் ஒன்னும் ஆஸ்திரேலியா போவ வேணாம். இங்கயே விளையாடுங்க – பி.சி.சி.ஐ போட்ட உத்தரவு

ஆனாலும் முகமது ஷமி தனது சிறப்பான பந்துவீச்சை இந்திய அணிக்காக எப்பொழுதுமே வழங்க கூடியவர். அவர் ஒயிட் பால், ரெட் பால், பிங்க் பால் என அனைத்திலும் மிகச் சிறப்பாக வீசக்கூடியவர். அதோடு அவரது அனுபவமும் அவருக்கு கை கொடுக்கும் என்பதனால் நிச்சயம் ஷமி சிறப்பாக செயல்படுவார் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by