நீங்க 2 பேர் ஒன்னும் ஆஸ்திரேலியா போவ வேணாம். இங்கயே விளையாடுங்க – பி.சி.சி.ஐ போட்ட உத்தரவு

Bishnoi
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma

- Advertisement -

இவ்வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு பதிலாக தற்போது ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிற்கு ஸ்டான்ட் பை வீரர்களாக சென்றுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரர்களாக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் ஆஸ்திரேலியா செல்ல மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Ravi Bishnoi

மேலும் அவர்களை இங்கு இந்தியாவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்று விளையாடுமாறும் பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் பேக்கப் வீரராக ரவி பிஷ்னாய் ஆஸ்திரேலியா பறப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா பயணிப்பார் என்றும் தெளிவான தகவலை பிசிசிஐ வழங்கி உள்ளது.

இதையும் படிங்க : 2022 டி20 உ.கோ’யில் ஹிட்மேன் ரோஹித் சர்மா படைக்க வாய்ப்புள்ள 5 சாதனைகளின் பட்டியல்

இதன் காரணமாக உலகக்கோப்பை அணியின் ஸ்டான்ட் பை வீரர்களாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகிய இருவரும் தற்போது தற்காலிகமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement