2022 டி20 உ.கோ’யில் ஹிட்மேன் ரோஹித் சர்மா படைக்க வாய்ப்புள்ள 5 சாதனைகளின் பட்டியல்

Rohit Sharma
- Advertisement -

உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும், ரவீந்திர ஜடேஜா – ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 2 முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் வெளியேறியதும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ROhit Sharma Matthew Wade

- Advertisement -

இருப்பினும் குறைகளை நிறையாக்கி கோப்பையை வெல்வதற்காக இந்தியா தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இத்தொடரில் இதர வீரர்களின் செயல்பாடுகளை விட கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2013இல் சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்கியது முதல் கடந்த 10 வருடங்களில் ஏராளமான ரன்களை குவித்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்றழைத்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அசால்டாக சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்றுள்ள அவர் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார்.

5 சாதனைகள்:
அப்படி அதிரடியான ரன்களை விளாசி அவர் சாதனைகளை படைக்கும் போதே வெற்றியும் தாமாக இந்தியாவின் பக்கம் வந்து சேரும். அந்தளவுக்கு சாதனைகளை படைத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதில் கில்லியான அவர் இந்த உலகக் கோப்பையில் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

rohith 1

1. கேப்டன் கிங்: டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சதங்களை (4) அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் எப்போதுமே சிறப்பாக விளையாடிய வரலாற்றைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இம்முறை அவர் சதமடிக்கும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதமடிக்கும் முதல் கேப்டனாகவும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்யும் கேப்டனாகவும் இரட்டை சாதனைகளை படைப்பார். ஏனெனில் கடந்த 2012இல் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்துள்ளதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

Rohith

2. அதிக ரன்கள்: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக ஏற்கனவே சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா இம்முறை இன்னும் 169 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்தனேவின் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைப்பார். அதற்கான வாய்ப்புகளும் அதிகமுள்ளது. அந்தப் பட்டியல்:
1. மகிளா ஜெயவர்தனே : 1016
2. கிறிஸ்த கெயில் : 965
3. திலகரத்ன தில்ஷன் : 897
4. ரோஹித் சர்மா : 847*

- Advertisement -

3. அதிக போட்டிகள்: கடந்த 2007 முதல் இதுவரை நடைபெற்ற அத்தனை உலக கோப்பையிலும் விளையாடும் ஒரே வீரராக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா இதுவரை 33 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் அவர் இன்னும் 3 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இலங்கையின் திலகரத்னே தில்சான் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைப்பார்.

Rohith

சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் அவருக்கு போட்டியாக யாருமே இல்லாத காரணத்தாலும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா 4 போட்டிகளில் விளையாடும் என்பதாலும் இந்த சாதனையை அவர் நிச்சயமாக படைக்கப் போகிறார். அந்த பட்டியல்:
1. தில்ஷான் : 35
2. ட்வயன் ப்ராவோ/ஷாஹித் அப்ரிடி/சோயப் மாலிக் : தலா 34
3. எம்எஸ் தோனி/கிறிஸ் கெயில்/முஷ்தபிசுர் ரஹீம்/ரோஹித் சர்மா* : தலா 33

4. அதிகப்பட்ச ஸ்கோர்: பொதுவாக ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமை பெற்றவர் என்பதற்கு அவருடைய 3 ஒருநாள் இரட்டை சதங்களே சான்றாகும். அந்த வகையில் இந்த உலக கோப்பையில் அவர் தன்னுடைய நாளில் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரராக சாதனை படைத்துள்ள பிரண்டன் மெக்கல்லம் (123, வங்கதேசத்துக்கு எதிராக, 2012) சாதனையை தகர்க்க வாய்ப்புள்ளது.

Rohith

5. சிக்ஸர் கிங்: அசால்டாக சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்றுள்ள ரோஹித் சர்மா இந்த தொடரில் இன்னும் 3 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைப்பார். இதுவரை 6 பந்துகளில் 6 சிக்சர் உட்பட 33 சிக்ஸர்களை விளாசி யுவராஜ் அந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதை தகர்க்க ரோகித் சர்மா 31 சிக்சருடன் காத்திருக்கிறார்.

Advertisement