அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ரெய்னா கையில் எடுத்த புதிய திட்டம் – சி.எஸ்.கே பாக்குமா?

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக மிக முக்கிய வீரராக கடந்த ஆண்டு வரை விளையாடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதனை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் எதுவும் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்தார். ஆனால் இந்த ஆண்டிற்கான ஏலத்தில் அவரை சிஎஸ்கே அணி மட்டுமின்றி எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

raina 1

- Advertisement -

இதன் காரணமாக முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை சுரேஷ் ரெய்னா தவறவிட்டார். இதன் காரணமாக வருத்தத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் அவர் ஏதாவது ஒரு அணியில் விளையாட மாட்டாரா என்று ஏங்கினர். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் சில வாரங்கள் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா பணியாற்றினார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஆர்வமாக இருப்பதாகவும், அதன் காரணமாக புதிய திட்டத்தை கையில் எடுத்து அதனை செயல்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

raina

அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வில்லை என்பதன் காரணமாக போதிய பயிற்சியின்மை மற்றும் மோசமான பார்ம் காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநில அணிக்காக ஆரம்ப காலகட்டத்தில் விளையாடிய சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு மீண்டும் அதே அணிக்காக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

வரும் நவம்பர் வந்தால் 36 வயதாகும் சுரேஷ் ரெய்னா நிச்சயம் இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாக தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் முடிவினை கையில் எடுத்துள்ளார். ஒருவேளை அவர் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் ஜொலிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல் தொடருக்கு திரும்பும் எண்ணத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : பஞ்சாப் நிர்ணயித்த பெரிய இலக்கினை ஊதித்தள்ளிய ராஜஸ்தான் – முழுபோட்டியில் நடந்தது என்ன?

அதன்படி எதிர்வரும் உள்நாட்டு தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஏதாவது ஒரு அணியில் மாற்று வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டு அணியில் விளையாட வைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவை சுரேஷ் ரெய்னா எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement