- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துபாயில் அந்த மாதிரி துருப்புச்சீட்டை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு.. 360 டிகிரி சூரியகுமார் பற்றி சுரேஷ் ரெய்னா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஏனெனில் வித்தியாசமான பவுண்டரிகளை கொண்ட துபாய் மைதானத்தில் சூரியகுமார் போன்றவர் அதிரடியாக விளையாடி முக்கிய ரன்களை எடுக்கக் கூடியவர் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அவர் துருப்புச் சீட்டாக இருந்திருப்பார் என்று ரெய்னா கூறியுள்ளார்.

- Advertisement -

ரெய்னா கருத்து:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா வலுவான அணியாக தெரிகிறது. ரோகித் சர்மா நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் சூரியகுமார் அணியில் தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரைப் போன்ற துருப்புச்சீட்டு இல்லாததை இந்தியா மிடில் ஆர்டரில் மிஸ் செய்யும்”

“2023 உலகக் கோப்பையில் சூரியகுமார் செயல்பாடுகளை நாம் பார்த்தோம். அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்தார். அனைத்து புறங்களிலும் அடிக்கும் திறன் கொண்டிருப்பதாலேயே அவரை மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுகிறார். ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்கும் திறன் கொண்ட அவர் கேம் சேஞ்சர். டாப் அணிகளுக்கு எதிராக 9க்கும் மேற்பட்ட ரன் ரேட்டில் சேசிங் செய்யக்கூடிய திறன் அவரிடம் இருக்கிறது”

- Advertisement -

திறமையும் ஏமாற்றமும்:

“எனவே அவர் அணியில் இருந்திருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் எதிரணிகளுக்கு எதிராக டாமினேட் செய்யும் வீரர் இந்தியாவிற்கு தேவை. துபாய் மைதானம் கொஞ்சம் தனித்துவமானது. அங்கே முன் பகுதி சிறியதாகவும் கவர்ஸ் பகுதி பெரியதாகவும் இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளை சூர்யா நன்றாக பயன்படுத்தக் கூடியவர். அவர் இல்லாத சூழ்நிலையில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகிறது”

இதையும் படிங்க: சுப்மன் கில் துணை கேப்டன் நியாயமே இல்ல.. அப்போ பும்ரா, அந்த 3 பசங்க யாரு? ஸ்ரீகாந்த் விளாசல்

“அவர்கள் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை” என்று கூறினார். இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் சூரியகுமார் சுமாராகவே விளையாடினார். குறிப்பாக ஃபைனலில் மெதுவாகவே விளையாடிய அவருடைய ஆட்டத்தை இன்னும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியவில்லை. அதனால் அவரை டி20 வீரராக கருதும் தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -