டி20 உ.கோ’யில் விளையாடத் சரியானவர் யார்? டிகே – ரிஷப் பண்ட் தேர்வில் சுரேஷ் ரெய்னா கூறுவது இதோ

Dinesh Karthik Suresh Raina Rishabh Pant
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. இத்தொடரில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கும் இந்தியா 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்து இந்தியாவுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தால் வெளியேறியது மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் குறைகளை நிறைவாக்கி வெற்றிக்கு தயாராகி வரும் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RIshabh Pant Dinesh Karthik

- Advertisement -

ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த அவருடைய கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தாலும் தம்மால் உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் வயதை வெறும் நம்பராக்கி 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து அசத்தினார். ஆனாலும் அவரது திறமையை நம்பாத கேப்டன் ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் அவரை கழற்றிவிட்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தார்.

பண்ட் வருவார்:
அதில் அறிமுகமான 2017 முதல் ஏற்கனவே 58 டி20 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளில் எப்போதும் மனதில் நிற்கும் அளவுக்கு செயல்படாததை போலவே சொதப்பிய அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் பாடத்தை கற்ற ரோகித் சர்மா அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பளித்தார். அதனால் உலக கோப்பையிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே அபாரமாக செயல்பட்டு காபா போன்ற சரித்திர வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ரிஷப் பண்ட் இந்த உலக கோப்பையில் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

Rishabh Pant and Hardik Pandya

அதற்காக தினேஷ் கார்த்திக்கை நீக்க வேண்டியதில்லை எனக்கூறும் அவர் 1 – 6 வரையிலான இந்திய பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ரிஷப் பண்ட் துருப்புச்சீட்டு வீரராக செயல்படுவார் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முக்கிய வீரரான அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்து காபாவில் நமக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் நம்முடைய துருப்புச் சீட்டு வீரர். ஏனெனில் 1 – 6 வரையிலான பேட்டிங் வரிசையில் நம்மிடம் இடது கை பேட்ஸ்மேன் இல்லை. எனவே இந்திய அணி அவரை பயன்படுத்த வேண்டியது முக்கியமாகும்”

- Advertisement -

“நல்ல வீரரான அவருக்கு அழுத்தமான சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தெரியும். அதனால் அணி நிர்வாகம் அவரை அணிக்குள் கொண்டு வரும் என்று நம்புகிறேன். குறிப்பாக ஒருசில போட்டிகளுக்கு பின் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகவும் அவசியமாகும். நம்மிடம் 1 – 6 வரை இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் எதிரணியிடம் 2 – 3 இடதுகை பவுலர்கள் இருக்கின்றனர்”

Raina

“மேலும் 2007, 2011, 2013 ஆகிய காலகட்டங்களில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், நான் போன்றவர்கள் விளையாடிய போது எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்தோம். எனவே அதைப்பற்றி ரோகித் – டிராவிட் ஆகியோர் சிந்திக்க வேண்டும். நமக்கு யார் விளையாடினாலும் வெற்றி தான் முக்கியம். ஆனால் நீங்கள் துருப்பு சீட்டு வீரர்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா துருப்புச் சீட்டாக செயல்படுவார் என்றாலும் இடதுகை பேட்ஸ்மேன் துருப்புச் சீட்டாக ரிசப் பண்ட் செயல்படுவார்”

இதையும் படிங்க : டி20 உ.கோ 2022 : முதல் போட்டியிலேயே அதிர்ச்சி, ஆசிய சாம்பியனை அலேக்காக சாய்த்த நமீபியா – குவியும் வாழ்த்துக்கள்

“தினேஷ் கார்த்திக் வாய்ப்பை பெற்று வேலையும் பெற்றுள்ளார். அதற்காக அவருக்கு பதிலாக பண்ட் விளையாட வேண்டுமென நான் கூறவில்லை. யார் வாய்ப்பு பெற்றாலும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வைக்க வேண்டும். இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களை கொண்ட நாட்டில் இடதுகை பேட்ஸ்மேன் எதிரணிக்கு அதிர்ச்சியை கொடுப்பார். எனவே மிடில் ஆர்டரில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த ரிஷப் பண்ட் போன்ற வீரர் இருப்பது அவசியமாகும்” என்று கூறினார்.

Advertisement