நானும் அவரோட விளையாடிருக்கேன்.. அந்த பரம்பரையில் வந்த அவருக்கு பயம் கிடையாது.. ரெய்னா பாராட்டு

Suresh Raina
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகின் எந்த அணியிடமும் தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.

முன்னதாக ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. ஆனால் பின்னர் களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 177/7 என தடுமாறியது. அப்போது 300 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை குல்தீப் யாதவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய துருவ் ஜுரேல் 90 ரன்கள் அடித்து காப்பாற்றினார்.

- Advertisement -

ரெய்னா பாராட்டு:
அதனால் 307 ரன்கள் அடித்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை 143 ரன்களுக்கு சுருட்டியது. இறுதியில் 192 ரன்களை சேசிங் செய்த போதும் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் ரஜத் படிடார், ஜடேஜா, சர்பராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

இருப்பினும் அப்போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பதறாமல் விளையாடிய ஜுரேல் 39* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் தம்முடைய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துருவ் ஜுரேலுடன் சேர்ந்து இதற்கு முன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்தியாவுக்காக ராணுவத்தில் பணியாற்றிய குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு தோல்வி பயம் கிடையாது என்று பாராட்டும் ரெய்னா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அற்புதமாக விளையாடிய அவருடன் உத்தரபிரதேசத்துக்காக நான் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். முதலில் சர்ப்ராஸ் பின்னர் ஜுரேல் என 2 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு ஸ்பெஷல் பாராட்டு கொடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்து குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அடுத்தடுத்து அரை சதமடிப்பது எளிதல்ல. ஜுரேல் விக்கெட் கீப்பிங் எனக்கு மிகவும் பிடித்துள்ளது”

இதையும் படிங்க: ஒன்றல்ல இரண்டல்ல 5 பேர்.. இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானவங்க தான்.. மைக்கேல் வாகன் பாராட்டு

“அதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். ராணுவ குடும்பத்திலிருந்து அவர் வந்துள்ளார். எனவே எங்கிருந்தும் எதையும் தோற்கக்கூடாது என்ற பயமற்ற அணுகுமுறை அவரிடம் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக நான்காவது போட்டியில் அரை சதமடித்ததும் அதை 1999 கார்கில் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன்னுடைய தந்தைக்கு துருவ் ஜுரேல் சல்யூட் அடித்து கொண்டாடி அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement