ஒன்றல்ல இரண்டல்ல 5 பேர்.. இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானவங்க தான்.. மைக்கேல் வாகன் பாராட்டு

Micheal Vaughan 7
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் ஏற்கனவே 2 வெற்றிகளை இந்தியா பதிவு செய்திருந்தது. எனவே இதையும் சேர்த்து 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வென்றுள்ளது.

அதனால் கடந்த 2012க்குப்பின் தொடர்ந்து 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைப்போம் என்று ஆரம்பத்தில் சவால் விட்ட இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றது.

- Advertisement -

தகுதியான இந்தியா:
ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் அதிரடியாகவே விளையாட முயற்சித்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த அந்த அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது. அதனால் அந்த அணியின் அதிரடியாக விளையாடும் பஸ்பால் அணுகுமுறை தற்போது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி போன்ற 5 முக்கிய வீரர்கள் இல்லாமல் டாஸ் வெல்லாமல் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் பின்தங்கியும் நான்காவது போட்டியில் வென்ற இந்தியா இத்தொடரை வெல்வதற்கு தகுதியான அணி என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். ஆரம்பத்தில் ராஞ்சி பிட்ச் மோசமாக இருக்கிறது என்று இந்தியாவை விமர்சித்த அவர் கடைசியில் இப்படி ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. டாஸ் கிடைக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலை. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி வென்ற இந்தியா முழு பாராட்டுக்கு தகுதியானவர்கள். இது மிகவும் கவரக்கூடிய டெஸ்ட் வெற்றியாகும். இந்த தொடரில் நிறைய இளம் இந்திய வீரர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட காலம் விளையாடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவிடம் தோற்றதில் அவமானம் இல்ல.. காரணம் இது தான்.. 4வது டெஸ்ட் பற்றி நாசர் ஹுசைன் கருத்து

அவர் கூறுவது போல விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களை வைத்தே இந்த தொடரில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வென்றுள்ளது. அத்துடன் விராட் கோலி போன்ற தற்போதைய வீரர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய இடத்தை நிரப்பும் அளவுக்கு தரமான வீரர்கள் இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement