சி.எஸ்.கே வாங்கலனா என்ன? சுரேஷ் ரெய்னாவை டிரேடிங் முறையில் வாங்கவுள்ள புதிய அணி – ரசிகர்கள் மகிழ்ச்சி

Raina
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாத துவக்கத்தில் வீரர்களுக்கான மெகா ஏலமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் போட்டி போட்டு தேர்வு செய்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை உறுதி செய்துள்ள வேளையில் ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

Gujarat Titans

- Advertisement -

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா தலைமை வகிக்கும் குஜராத் அணியில் இருந்து தற்போது முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான ஜேசன் ராய் இம்முறை குஜராத் அணிக்காக விளையாட 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள அவர் ஒரு மிகச் சிறந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது அதிரடியை ஆரம்ப போட்டிகளில் இருந்து வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக உறுதி செய்திருந்தார்.

raina 1

இதன்காரணமாக அதே 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீரரை டிரேடிங் முறையில் மாற்றம் வாய்ப்பு குஜராத் அணிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று கூறப்பட்டு வரும் வேளையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த சுரேஷ் ரெய்னாவை ஜேசன் ராய்க்கு பதிலாக டிரேடிங் முறையில் குஜராத் அணி எடுக்க நினைக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி வெளியான ரிப்போர்ட்டின் படி ரசிகர்களும் சுரேஷ் ரெய்னாவை மீண்டும் குஜராத் அணியில் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில் குஜராத் லயன்ஸ் அணியை இதற்கு முன்னர் ஏற்கனவே ரெய்னா கேப்டனாக வழிநடத்தியவர் என்பதனால் அந்த வகையில் மீண்டும் அவர் குஜராத் அணிக்கு விளையாட விரும்புவார் என்பதனால் சுரேஷ் ரெய்னாவை தான் ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : இனிமே இவரை யாராலும் வெளியேற்ற முடியாது. இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

மேலும் குஜராத் அணியின் கேப்டன் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும் மிடில் ஆர்டரில் ஒரு அனுபவ வீரர் தேவை என்பதன் காரணமாக சுரேஷ் ரெய்னாவை அணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சுரேஷ் ரெய்னா இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்று அனைவரும் கலங்கிய வேளையில் தற்போது மீண்டும் ரெய்னா இடம்பெற அருமையான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement