இனிமே இவரை யாராலும் வெளியேற்ற முடியாது. இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கும் இந்த டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியாவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND-1

- Advertisement -

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:
முன்னதாக டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அனுபவ வீரர் ரோகித் சர்மா புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இலங்கை தொடர் முதல் முழு நேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் அவருக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக உதவி செய்ய உள்ளார்.

இவர்கள் தலைமையில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில வருடங்களாகவே ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வந்த அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பின் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் ரித்திமான் சாஹா, இசாந்த் சர்மா போன்ற மூத்த வீரர்களும் கழட்டிவிட பட்டுள்ளார்கள்.

pujara 1

ஏற்கனவே 33 வயதை கடந்துவிட்ட இவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து சிறப்பான வருங்காலத்தை உருவாக்கும் வகையில் இனிமேல் இவர்களுக்கு இந்திய அணியில் எப்போதும் வாய்ப்பு கிடையாது என இந்திய தேர்வுக்குழுவினர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களாக இந்திய மிடில் ஆர்டரில் முக்கிய தூண்களாக விளையாடி வந்த இவர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

நிரந்தர இடம் பிடிக்கும் ஹனுமா விஹாரி:
அத்துடன் நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய போதிலும் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த இளம் வீரர் ஹனுமா விஹாரி ஒருவழியாக நிரந்தர இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆம் கடந்த 2018 ஆண்டு இந்திய அணியில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற ஹனுமா விஹாரி தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

Vihari

குறிப்பாக கடந்த 2019இல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக சதமடித்த அவர் அதன்பின் கடந்த 2020இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது போட்டியில் தோற்க இருந்த இந்தியாவை காயத்தையும் பொருட்படுத்தாமல் வலியை பொருத்துக்கொண்டு காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

அப்போட்டியில் தொடர்ந்து தனது உடம்பை தாக்கிய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை கடைசி வரை நின்று எதிர் கொண்ட அவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் உடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து ட்ரா செய்ய உதவினார். அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு மேல் விலகிய அவரை கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காரணமே இல்லாமல் இந்திய அணி நிர்வாகம் கழட்டி விட்டது.

Vihari

ரஹானே போவதால் கிடைக்கும் வாய்ப்பு:
இருப்பினும் அதற்கு அசராத அவர் கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய பயிற்சிப் போட்டியில் அபாரமாக செயல்பட்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பினார். அந்த வேளையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் முழு வாய்ப்பை பெறாத இவர் 2வது போட்டியின் போட்டியின் 2வது இன்னிங்ஸ்சில் முக்கியமான 40* ரன்கள் குவித்த போதிலும் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இப்படி சிறப்பாக விளையாடினாலும் அஜிங்கிய ரஹானே இருந்த காரணத்தால் அவருக்கு கடந்த 4 வருடங்களாக ஒரு நிரந்தரமான இடம் இல்லாமல் இருந்தது. சொல்லப்போனால் கடந்த 4 வருடங்களில் இவர் வெறும் 13 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் தற்போது ரகானே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 100 ஆவது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு மைல்கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

அப்படிப்பட்ட வேளையில் வெறும் 28 வயது மட்டுமே நிரம்பிய இவர் தற்போது போலவே சிறப்பாக செயல்படும் பட்சத்தில் குறைந்தது அடுத்த 4 – 5 வருடம் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என நம்பலாம். மேலும் ஏற்கனவே இந்திய ஒருநாள், டி20 ஆகிய அணிகளில் இவருக்கு இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெயரை ஹனுமா விஹாரி வாங்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

Advertisement