
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 61 ரன்களையும், இஷான் கிஷன் 42 ரன்களையும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் 4 ஓவர்கள் பந்துவீசி 31 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இந்த போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்த போது ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது பவுலராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தார். அப்படி சுனில் நரேன் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் மட்டுமே வீழ்த்தியிருந்தனர்,
இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – மனிஷ் பாண்டே
இவ்வேளையில் இன்றைய போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம் சுனில் நரேனும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐ.பி.எல் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பவுலராக சாதனை நிகழ்த்தினார். அதோடு வெளிநாட்டு வீரர்களில் முதல் பவுலராகவும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.