விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – மனிஷ் பாண்டே

Manish Pandey
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதுவரை 18 ஐபிஎல் தொடர்கள் முற்றிலுமாக நிறைவடைந்துள்ள வேளையில் இந்த ஆண்டு 2026 ஆம் ஆண்டிற்கான 19-வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3 ஆவது வீரராக மனிஷ் பாண்டே நிகழ்த்திய சாதனை :

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ள வேளையில் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகள் ஐபிஎல் போட்டிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் மே 3-ஆம் தேதியான இன்று சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள கொல்கத்தா வீரர் மணிஷ் பாண்டே (ரோகித் சர்மா, விராட் கோலி) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக ஒரு மாபெரும் சாதனையை இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் மனிஷ் பாண்டே நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் 19 சீசன்களிலும் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடிய வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சாதனை நிகழ்த்தியிருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் கேப்டன்சியை விட இந்த 2 விடயம் தான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது – அஷ்வின் ஓபன்டாக்

இவ்வேளையில் தற்போது மணிஷ் பாண்டேவும் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 19 சீசனிலும் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை மேலும் ஒரு வீரராக நிகழ்த்த தோனிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement