சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஒன்பது ஆட்டங்களிலும் விளையாடாத அவர் எப்போது மீண்டும் களத்திற்கு திரும்புவார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
தோனியிடம் எனக்கு பிடித்த 2 விடயங்கள் : அஷ்வின் ஓபன்டாக்
தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனி இந்த ஆண்டுடன் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதனால் இந்த தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதோடு தோனியுடன் இருக்கும் தங்களது அனுபவங்கள் குறித்தும் பல்வேறு விடயங்களை முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். அது குறித்த செய்திகள் எல்லாம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் தோனியிடம் தனக்கு பிடித்த விடயங்கள் குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பொதுவாகவே அனைவரும் தோனியின் கேப்டன்சி விடயத்தை மிகவும் பெருமையாக பேசுவார்கள். ஆனால் தோனியின் விடயத்தில் கேப்டன்சியை விட இரண்டு சிறப்பான விடயங்கள் உள்ளன அதுதான் எனக்கு பிடிக்கும்.
அந்த வகையில் அவர் ஒரு மிகச் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் போட்டியை இறுதிவரை கொண்டு சென்று அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் அவரைப் போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது கிடையாது. அதேபோன்று கேப்டன்சியை விட அவரது விக்கெட் கீப்பிங் என்பது அபாரமாக இருக்கும். நான் தோனியுடன் இணைந்து பல ஆண்டுகள் விளையாடி இருக்கின்றேன். ஆனால் எப்போதுமே அவர் எனக்கான பீல்டிங்கை செட் செய்து கொடுத்தது கிடையாது.
இதையும் படிங்க : அறிமுகமான முதல் போட்டியிலேயே காயத்தை சந்தித்த சி.எஸ்.கே அணியின் வீரர் – என்ன நடந்தது?
பந்துவீச்சாளரான நானே எனக்கு தேவைப்படும் பீல்டர்களை அந்தந்த இடத்தில் நிறுத்தி பந்து வீசுவேன். ஒரு பந்துவீச்சாளரை சுதந்திரமாக அவர்களது திட்டத்திற்கு ஏற்ப பந்துவீச வைக்கும் விக்கெட் கீப்பராகவும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக அவர் ஸ்பின்னர்களை கையாள்வது போன்று எந்த ஒரு விக்கெட் கீப்பரும் சிறப்பாக கையாண்டு நான் பார்த்தது கிடையாது என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



