ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை அசத்தலாக நிகழ்த்திய மாயாஜால சுழல் நாயகன் சுனில் நரேன் – விவரம் இதோ

Sunil Narine KKR
- Advertisement -

எதிர்பாரா திருப்பங்களுடன் ரசிகர்களை எகிற வைத்து வரும் ஐபிஎல் 2022 தொடர் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உண்மையாகவே எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து வருகிறது. ஏனெனில் நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்த அந்த அணி அதன்பின் மேலும் ஒருசில வெற்றிகளைப் பெற்று முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் அந்த வெற்றி நடையை தொடரும் யுக்தியை கையாள தெரியாத அந்த அணி அதன்பின் வரிசையாக 5 தொடர் தோல்விகளை பெற்று பங்கேற்ற 9 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

KKR Shreyas Iyer

- Advertisement -

தற்போதைய நிலைமையில் தன்னுடைய அடுத்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலை கொல்கத்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி 5 தொடர் வெற்றிகளை பெற்றாலும் கூட ரன்ரேட் மற்றும் இதர அணிகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

பேட்டிங் – பவுலிங் மோசம்:
அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களை சேர்ப்பதில்லை. அதைவிட ஒவ்வொரு போட்டிக்கும் பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்கும் அந்த நிர்வாகத்திற்கு இதுவரை ஒரு நிலையான ஓப்பனிங் ஜோடி கிடைக்கவில்லை. அதேபோல் பவுலிங்கில் உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் ஓரளவு கை கொடுத்தாலும் டிம் சௌதீ, ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுக்காதது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

SRH vs KKR

குறிப்பாக அந்த அணி பெரிதும் நம்பியிருந்த ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் பட் கம்மின்ஸ் ஒவ்வொரு போட்டிக்கும் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலவே சுழல் பந்து வீச்சில் அந்த அணி நம்பிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றுகிறார்.

- Advertisement -

தனி ஒருவன் நரேன்:
இப்படி அந்த அணியின் மோசமான பவுலிங்கில் ஒரேஒரு முத்தாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் தனி ஒருவனை போல அபாரமாகவும் குறைவான ரன்களை மட்டுமே வழங்கி துல்லியமாக பந்து வீசி வருகிறார். பொதுவாகவே சுழலில் மாயாஜாலம் நிகழ்த்துபவராக கருதப்படும் அவரை அடிப்பதற்கு பொல்லார்ட் உட்பட எந்த ஒரு அதிரடி வீரரும் சற்று யோசிப்பார்கள். அதன் காரணமாகவே அந்த அணி நிர்வாகம் அவரை 6 கோடி என்ற நல்ல தொகைக்கு தக்க வைத்தது.

அந்த நிலைமையில் இந்த வருடம் பங்கேற்ற 8 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை அதுவும் 5.38 என்ற துல்லியம் நிறைந்த அற்புதமான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் தன்னை ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று மீண்டும் நிரூபித்து கொல்கத்தாவின் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார். பொதுவாக நிறைய வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுவதால் நிறைய வீரர்கள் ஒரே அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் ஒவ்வொரு வருடமும் புதுபுது அணிகளுக்கு மாறும் கதைகளை பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த 2012இல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு காலடி வைத்த அவர் 10 வருடங்களாக தனது அபார செயல்பாடுகளால் ஒரே அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருவது அவரின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

புதிய சாதனை:
1. அந்த வகையில் டெல்லிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கொல்கத்தாவின் 8-வது லீக் போட்டியில் 1 விக்கெட் எடுத்த அவர் “ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வெளிநாட்டு சுழல்பந்து வீச்சாளர்” என்ற புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியலில் டுவைன் பிராவோ 181, லசித் மலிங்கா 170 ஆகிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 2 இடங்களில் உள்ள நிலையில் அவர்களுக்கு அடுத்து சுனில் நரேன் தான் 150 விக்கெட்டுகள் எடுத்து 3-வது வெளிநாட்டு பந்துவீச்சாளராக சாதித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 : ஒரே போட்டியில் சைலண்டாக 2 சாதனைகளை படைத்த டேவிட் வார்னர் – விவரம் இதோ

2. அவை அனைத்தையும் விட 150 விக்கெட்டுகளை 6.65 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் டாப் 10 பட்டியலில் இருக்கும் இதர பவுலர்களை விட மிகக்குறைந்த எக்கனாமியை கொண்ட பவுலராக ஜொலிப்பது உண்மையாகவே அவரின் தரத்திற்கான சான்றாகும். மேலும் ஒட்டுமொத்த பட்டியலில் 150 விக்கெட்களுடன் அவர் 8-வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement