ஐ.பி.எல் 2022 : ஒரே போட்டியில் சைலண்டாக 2 சாதனைகளை படைத்த டேவிட் வார்னர் – விவரம் இதோ

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை 156 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒருமுறை சன்ரைசர்ஸ் அணிக்காக கோப்பையையும் கேப்டனாக வென்று கொடுத்துள்ளார். ஆனால் கடந்த சில சீசனில் அவரது சில மோசமான ஆட்டம் காரணமாக அவர் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

David Warner vs RCB

இந்நிலையில் மெகா ஏலத்தின் போது அவரை டெல்லி அணி சரியாக கணித்து நல்ல விலைக்கு தட்டி தூக்கியது. சென்ற ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற டேவிட் வார்னர் தற்போது டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை சேஸிங் செய்து விளையாடிய டெல்லி அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவர் அடித்த இந்த 42 ரன்கள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முக்கிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

warner 1

ஒன்று ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட பவுருக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் இணைந்துள்ளார். அந்த வகையில் சுனில் நரேனுக்கு எதிராக அவர் 176 ரன்கள் குவித்துள்ளது மட்டுமின்றி இரண்டு முறை மட்டுமே அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இப்படி ஐபிஎல் தொடரில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ :

- Advertisement -

1. சுனில் நரேனுக்கு எதிராக டேவிட் வார்னர் 176 ரன்கள் (2 முறை அவுட்)
2. பியூஸ் சாவ்லாவுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 175 ரன்கள் (4 முறை அவுட்)
3. அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலி 160 ரன்கள் (1 முறை அவுட்)
4. மிஸ்ரா பந்து வீச்சில் விராட் கோலி 158 ரன்கள் (2 முறை அவுட்)
5. பிராவோ பந்து வீச்சில் விராட் கோலி 157 ரன்கள் (1 முறை அவுட்)
6. உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விராட் கோலி 150 ரன்கள் (3 முறை அவுட்)

இதையும் படிங்க : என்னடா கேப்டன்சி இது? ரிஷப் பண்ட் செய்த தவறை சுட்டிக்காட்டி விமர்சித்த – மைக்கல் வாகன்

மேலும் இரண்டாவது சாதனையாக ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் டேவிட் வார்னர் தற்போது இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே பஞ்சாப் அணிக்கெதிராக அவர் 1005 ரன்கள் அடித்திருந்தாலும் தற்போது கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆயிரம் ரன்களை அவர் கடந்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல் இதோ :

1. சென்னை அணிக்கு எதிராக ஷிகர் தவான் (1029)
2. கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் சர்மா (1018)
3. பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் (1005)
4. கொல்கத்தா அணிக்கு எதிராக வார்னர் (1000)

Advertisement