என்னடா கேப்டன்சி இது? ரிஷப் பண்ட் செய்த தவறை சுட்டிக்காட்டி விமர்சித்த – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பாதி போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்த வேளையில் மும்பை மற்றும் சென்னை அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் பிளேஆப் வாய்ப்புக்காக கடுமையான போட்டியை அளித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளில் இந்திய வீரர்களே கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர்.

Kuldeep Yadhav vs KKR

- Advertisement -

இந்திய கேப்டன்களின் தலைமையில் ஒவ்வொரு அணியும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லி அணியும் ரிஷப் பண்ட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை டெல்லி அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்ற அவர்கள் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஒரு கருத்தினை பதிவுசெய்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அதை தொடர்ந்து இந்த எளிய இலக்கினை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றாலும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவிற்கு ஏன் 3 ஓவர்கள் வழங்கப்பட்டது என்ற விமர்சனம் அனைவரது மத்தியிலும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் செய்த அந்தத் தவறை சுட்டிக் காண்பித்த மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த அந்த கருத்தில் : வித்தியாசமான கேப்டன்சி. குல்தீப் யாதவ்க்கு ஏன் முழு ஓவர்கள் பந்துவீச வழங்கவில்லை? என்று அவரது கேப்டன்சிக்கு எதிராக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கம்பெனிக்கு ஆள் கிடைச்சாச்சு. கொல்கத்தா அணியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா?

ஏற்கனவே இந்த விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள பண்ட் : மைதானத்தில் இருந்த பனிப்பொழிவு காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மைக்கேல் அவரது கேப்டன்சி குறித்து விமர்சிக்க இந்த டிவீட்டை கண்ட இந்திய ரசிகர்கள் பண்ட்டிற்கு ஆதரவாக மைக்கேல் வாகனை வெளுத்து வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement