தல 150.. ஹைதராபாத்துக்கு 11 வருட படுதோல்வியை பரிசளித்த சிஎஸ்கே.. தோனி மாபெரும் வரலாற்று சாதனை

- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

அந்தப் பட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98, சிவம் துபே 39*, டேரில் மிட்சேல் 52 ரன்கள் எடுத்த உதவியுடன் 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த ஹைதராபாத் ஆரம்பம் முதலே சென்னையின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

தல 150:
இறுதியில் 18.5 ஓவரில் ஹைதராபாத்தை 134 ரன்களுக்கு சுருட்டிய சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசளித்தது. குறிப்பாக இதே சீசனில் முதல் முறை சந்தித்த போது தோல்வியை கொடுத்த ஹைதராபாத்துக்கு இப்போட்டியில் சென்னை படுதோல்வியை பரிசளித்தது என்றே சொல்லலாம்.

அதனால் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி ரன்கள் (78) அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் இதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 2013ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே ஹைதராபாத் அணியின் முந்தைய மிகப்பெரிய தோல்வியாகும்.

- Advertisement -

அது போக இந்த வெற்றியையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் புனே அணிகள் பதிவு செய்த 150 வெற்றிகளில் எம்எஸ் தோனி ஒரு அங்கமாக இருந்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 150*
2. ரவீந்திர ஜடேஜா : 133*
3. ரோகித் சர்மா : 133*

இதையும் படிங்க: வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது.. மைதானமும் நல்லாதான் இருந்தது.. சி.எஸ்.கே விடம் தோற்ற பிறகு – கம்மின்ஸ் பேச்சு

மேலும் இந்த வருடம் இதுவரை விளையாடிய 7 இன்னிங்ஸில் 96* ரன்கள் எடுத்துள்ள தோனி ஒருமுறை கூட அவுட்டாகவில்லை. அந்த வகையில் 259.46 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து வரும் தோனி இந்த வருடம் இன்னும் அவுட்டாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. அதே காரணத்தால் இந்த சீசனில் அவருடைய பேட்டிங் சராசரி முடிவற்றதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement