கம்பெனிக்கு ஆள் கிடைச்சாச்சு. கொல்கத்தா அணியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா?

DC vs KKR Shreyas Iyer Rishabh Pant
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகக் கருதப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆரம்பத்தில அசத்தினாலும் அதன்பின் சொபதப்பல் என்ற வார்த்தைக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருவதை பற்றி பார்ப்போம். அந்த சொதப்பலில் ஒரு பகுதியாக ஏப்ரல் 28-ஆம் தேதி நேற்று நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

KKR Shreyas Iyer

- Advertisement -

வான்காடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல் போன்ற முக்கிய வீரர்கள் கைவிட்ட நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 (37) ரன்களும் நித்திஷ் ராணா 57 (34) ரன்களும் எடுத்து காப்பாற்றியதால் 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி அந்த அணி 146/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

கொல்கத்தா 5-வது தோல்வி:
அதை தொடர்ந்து 147 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே பிரிதிவி ஷா விக்கெட்டை எடுத்து அதன்பின் அதிரடியாக 42 (26) ரன்கள் விளாசி தொல்லை கொடுத்த டேவிட் வார்னரின் விக்கெட்டையும் சாய்த்து நடுவரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட்டையும் 2 (5) ரன்களில் காலி செய்து வெற்றிக்கு போராடினார். ஆனால் இதர பவுலர்கள் அவருக்கு கை கொடுக்க தவறியதால் லலித் யாதவ் 22 (29), அக்சர் படேல் 24 (17), ரோவ்மன் போவெல் 33* (16) ஆகியோர் கணிசமான ரன்கள் எடுத்ததே கொல்கதாவின் தோல்விக்கு போதுமானதாக அமைந்தது. இறுதியில் 19 ஓவர்களிலேயே 150/6 ரன்களை எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை சுவைத்தது புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.

Kuldeep Yadhav vs KKR

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பியதுடன் பந்துவீச்சில் போராட தவறிய கொல்கத்தா பங்கேற்ற 9 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போதைய நிலைமையில் எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற மோசமான நிலைமைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மொத்தமும் சொதப்பல்:
இத்தனைக்கும் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிராக முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா பெங்களூருவுக்கு எதிராக தோற்றாலும் அதன்பின் பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்தது. ஆனால் அதன்பின் நேற்றுடன் சேர்த்து அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்த அந்த அணி தற்போது 8-வது இடத்திற்கு தள்ளப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

KKR Shreyas Iyer Finch

பொதுவாக நிறைய அணிகள் ஒருசில வெற்றிகளுக்குப் பின் நல்ல வீரர்கள் பெஞ்சில் இருந்தாலும் அதே வீரர்களை வைத்துக்கொண்டு வெற்றிநடை போடுவதையே விரும்புவார்கள். ஆனால் கொல்கத்தா அணியிலோ ஒருசில வெற்றிகளுக்குப் பின் சோதித்துப் பார்க்கிறேன் என்ற பெயரில் பேட்டிங் வரிசையில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்தது. குறிப்பாக எப்போதாவது குருட்டு வாக்கில் அடிக்கும் சுனில் நரேனை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனை போல தொடர்ந்து டாப் ஆர்டரில் விளையாட வைக்கும் அந்த அணியின் முயற்சிக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.

- Advertisement -

அத்துடன் இந்திய விக்கெட் கீப்பர் செல்டன் ஜாக்சனை நம்பாமல் இங்கிலாந்தின் சாம் பில்லிங்சை அவரின் இடத்தில் விளையாட வைத்து அவரையும் டாப் முதல் மிடில் ஆர்டர் வரை மாற்றி மாற்றி களமிறக்கி தோல்வி அடைந்ததால் பெஞ்சில் அமர வைத்தது. மேலும் வெங்கடேஷ் ஐயர் – சுனில் நரேன், சுனில் நரேன் – சாம் பில்லிங்ஸ், சுனில் நரேன் – ஆரோன் பின்ச், பின்ச் – வெங்கடேஷ் ஐயர் என ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமாக ஓப்பனிங் ஜோடியை பிரித்து மாற்றியது, ஒருசில போட்டிகளில் சொதப்பியதால் பட் கமின்சை பெஞ்சில் உட்கார வைத்தது என யார்மீதும் நம்பாமல் 11 பேர் அணியில் அந்த அணி நிர்வாகம் செய்யும் குளறுபடிகளே இந்த மொத்த சொதப்பல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

சென்னைக்கே டஃப்:
அதிலும் நேற்றைய போட்டியில் 20 ஓவர்களை வீச அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் உட்பட 8 பவுலர்கள் களமிறங்கியது அந்த அணியின் நிலைப்பாட்டை தெளிவாக காட்டுகிறது. மேலும் கேப்டனை தவிர யாருக்கும் ஒரு நிலையான இடமில்லை என்ற எண்ணமும் அந்த அணி வீரர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுவதை தடுத்து தோல்விக்கான மறைமுக காரணமாகிறது.

- Advertisement -

அதே சமயம் ஆரம்பத்திலிருந்து தொடர் தோல்விகளால் தவிக்கும் நடப்புச் சாம்பியன் சென்னை அணியில் கூட இவ்வளவு மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்யவில்லை. ஆனால் தேவையில்லாத மாற்றங்களால் சொதப்பும் சென்னைக்கே டஃப் கொடுக்கும் வகையில் கொல்கத்தா சொதப்புவதாக தற்போது அந்த அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க : 3 ஓவர் வீசி 4 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவிற்கு ஏன் கடைசி ஓவர் குடுக்கல – ரிஷப் பண்ட் கொடுத்த விளக்கம்

ஏனெனில் 8 போட்டிகளில் சென்னை பெற்ற 6 தோல்விகளை கொல்கத்தா 9 போட்டிகளில் பெற்று அதற்கு கம்பெனி கொடுக்கும் வகையில் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் இந்த சொதப்பல்களால் அடுத்து வரும் போட்டிகளில் சென்னை தொடர் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

Advertisement