12 பாயிண்ட்ஸ் விட்றாதீங்க.. எல்லாமே இங்கிலாந்துக்கு சாதகமா இருக்கு.. இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

sunil gavaskar 33
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்று விட்டது.

எனவே இந்த கடைசி சம்பிரதாய போட்டியிலும் வென்று 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி முயற்சிக்கவுள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள இங்கிலாந்து கடைசி போட்டியில் வென்று இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு போராட உள்ளது.

- Advertisement -

எச்சரித்த கவாஸ்கர்:
இந்நிலையில் இந்தப் போட்டி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தரம்சாலா நகரில் உள்ள ஹெச்பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மிகவும் அழகான மைதானங்களில் ஒன்றான தரம்சாலாவில் இம்முறை பனி மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் பகல் நேரத்தில் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெப்பம் இருக்கும் என்றும் வானிலை மையத்தின் அறிக்கை கூறியுள்ளது.

அதன் காரணமாக தர்மசாலா மைதானம் இந்திய அணியை விட இங்கிலாந்துக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று சுனில் காஸ்கர் எரித்துள்ளார். எனவே இந்த சம்பிரதாய போட்டியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து விளையாடுமாறு இந்திய அணியை கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்தத் தொடரில் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. அந்தப் போட்டியும் குளிர்ச்சியான வானிலை நிலவக்கூடிய சூழ்நிலையில் நடைபெற உள்ளது. எனவே அங்கே இந்தியாவை விட இங்கிலாந்து அணி தான் சொந்த மண்ணில் விளையாடுவதை போல் உணர்வார்கள். ஏனெனில் பந்து காற்றில் அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால் அது வேகத்துக்கு சாதகமாக இருக்குமா என்பதை பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: “புது சீசன், புது ரோல்” தோனி இப்படி மட்டும் பண்ணாருனா மரண மாஸா இருக்கும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

“இந்த தொடரை வென்று விட்டோம் என்று நினைத்து இந்தியா இப்போட்டியை எளிதாக விடலாம். ஆனால் இந்த போட்டியும் உங்களுக்கு 12 புள்ளிகளை கொடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்திய அணி இப்போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. தொடரை வென்று விட்டதால் அழுத்தம் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் நீங்கள் பாதுகாப்பதற்கும் தனிநபர்கள் முன்னேறுவதற்கும் அங்கே நிறைய இடங்கள் உள்ளன” என்று கூறினார்.

Advertisement