“புது சீசன், புது ரோல்” தோனி இப்படி மட்டும் பண்ணாருனா மரண மாஸா இருக்கும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அதிகமுறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனை சமன் செய்தது. அதோடு நடப்பு சாம்பியனாக 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது சீசனில் அடியெடுத்து வைக்கும் சென்னை அணி முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து மார்ச் 22-ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கின்றது.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் : “புதிய சீசன், புதிய ரோல்” என்ற ஒரு பதிவினை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

- Advertisement -

அதாவது இந்த சீசனில் அவர் கேப்டனாக செயல்படாமல் வேறு மாதிரி விளையாடப்போவதாக இந்த கருத்தின் மூலம் தெரிவித்துள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு சிலர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இம்பேக்ட் பிளேயராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

இவ்வேளையில் சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் தோனி துவக்க வீரராக விளையாடினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தற்போது 42 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் இந்த சீசனில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக கடைசி சில ஓவர்கள் களத்திற்கு வந்து விளையாடாமல் ஓப்பனராக துவங்கி சுதந்திரமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது கரியரினை மகிழ்ச்சியாக அவர் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அப்படி துவக்க வீரராக களமிறங்கி தோனி விளையாடினால் அது எங்களுக்கு போனஸ் ட்ரீட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதள மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 7 வருஷம் யாராலும் முடியல.. நீங்க பேசுறது தப்பு.. சாய் கிஷோரை விமர்சித்த தமிழ்நாடு கோச்’சை விளாசிய டிகே

சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மனாக விளங்கிய தோனி தனது பினிஷிங் திறன்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும் ஆரம்பகட்டத்தில் டாப் ஆர்டரில் விளையாடி அதிரடி காட்டியவர் எனவே தற்போது தனது கரியர் முடியும்போதும் டாப் ஆர்டரில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement