7 வருஷம் யாராலும் முடியல.. நீங்க பேசுறது தப்பு.. சாய் கிஷோரை விமர்சித்த தமிழ்நாடு கோச்’சை விளாசிய டிகே

- Advertisement -

ரஞ்சிக்கோப்பை 2024 தொடரின் செமி ஃபைனலில் மும்பைக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடத்திற்கு பின் ஃபைனலுக்குச் சென்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தமிழக அணியின் கனவு உடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை பிரிதிவி ஷா, கேப்டன் ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 107/6 என தடுமாறியது. ஆனால் அப்போது கேரியரில் முதல் முறையாக சதமடித்த சர்துள் தாக்கூர் 109 ரன்கள் விளாசி காப்பாற்றினார். அதனால் தப்பிய மும்பை 359 ரன்கள் அடித்து பின்னர் 162 ரன்களுக்கு தமிழ்நாடு அணியை ஆல் அவுட்டாக்கி வரலாற்றில் 48வது முறையாக ஃபைனல் சென்றது.

- Advertisement -

டிகே பதிலடி:
அதனால் அப்போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்த தொடர் முழுவதும் மொத்தமாக 53 விக்கெட்டுகள் எடுத்து முழுமூச்சுடன் போராடிய கேப்டன் சாய் கிஷோரின் போராட்டம் வீணானது. ஆனால் அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சாய் கிஷோரின் முடிவு தான் தோல்விக்கு முக்கிய காரணம் தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்சன் குல்கர்னி விமர்சித்தார்.

அந்த முடிவால் முதல் நாள் காலை 9 மணிக்கே வெற்றி பறிபோய் விட்டதாக தெரிவித்த அவர் சாய் கிஷோர் தமிழக அணியின் பாஸ் போல செயல்படுவதாகவும் கூறினார். மேலும் மும்பையை சேர்ந்த தமக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற அந்த போட்டியின் பிட்ச் எப்படி இருக்கும் என்பது நன்றாக தெரியும் என்று தெரிவித்த அவர் தன்னுடைய கருத்துக்களை சாய் கிசோர் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

அதை பார்த்த தமிழக ரசிகர்கள் கேப்டனுடன் சேர்ந்து செயல்படாமல் இப்படி கடைசியில் விமர்சிப்பதா என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கடந்த 7 வருடங்களில் தம்மை போன்ற மற்ற வீரர்களால் நெருங்க முடியாத செமி ஃபைனலுக்கு தமிழகத்தை கேப்டனாக அழைத்துச் சென்ற சாய் கிசோரை தவறாக விமர்சிக்காதீர்கள் என சுலக்சன் குல்கர்னிக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா கிட்ட பேசாம மும்பை இந்தியன்ஸ் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க – பிரவீன் குமார் கருத்து

இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது மிகவும் தவறு. பயிற்சியாளரின் இந்தக் கருத்து ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. 7 வருடங்கள் கழித்து தமிழக அணியை இந்த கேப்டன் செமி ஃபைனலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த வகையில் நல்ல விஷயங்கள் நடக்கத் துவங்கியுள்ளதாக நினைத்து ஆதரவு கொடுக்க வேண்டிய பயிற்சியாளர் அதை செய்யாமல் கேப்டனையும் அணியையும் பேருந்துக்கு கீழே போட்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement