ரோஹித் சர்மா கிட்ட பேசாம மும்பை இந்தியன்ஸ் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க – பிரவீன் குமார் கருத்து

Praveen-Kumar
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இதை தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளுமே தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் சில அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியாவை விலைக்கு வாங்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

இப்படி அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் அந்த மாற்றம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் குமார் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மாற்றம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : கேப்டன் பதவி மாற்றத்தினால் ரோகித் சர்மாவின் ஆட்டம் பாதிக்காது என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் கட்டாயம் அவருக்கு அணியில் என்ன ரோலில் நாம் விளையாடுகிறோம் என்பது தெரியும். எது எப்படி இருந்தாலும் ரோகித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். என்னைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் கண்டிப்பாக ரோகித் சர்மாவிடம் இந்த முடிவு கொடுத்து முன்கூட்டியே பேசியிருக்கும். அவரிடம் பேசாமல் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்புவதால் வெளியேறப்போகும் வீரர் யார்? 2 பேர்ல யாரா இருக்கும் – புதிய குழப்பம்

அதோடு மும்பை அணி இது போன்ற பெரிய முடிவுகளை ரோஹித் சர்மாவிடம் ஆலோசிக்காமல் எடுத்திருக்காது. எனவே ரோகித் சர்மா ஒப்புதல் உடன் தான் இந்த மாற்றம் நடந்திருக்கும் என்றும் பிரவீன் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement