ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்புவதால் வெளியேறப்போகும் வீரர் யார்? 2 பேர்ல யாரா இருக்கும் – புதிய குழப்பம்

Bumrah-and-Akash
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருவதன் காரணமாக பணிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் ஐபிஎல் தொடருக்கு அடுத்து தான் இந்திய அணி சர்வதேச போட்டியில் பங்கேற்கும் என்பதனால் இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட ஆர்வம் காட்டுகிறார். இதன் காரணமாக அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான கடந்த நான்காவது போட்டியின் போது பும்ரா ஓய்வெடுத்துக் கொண்டதன் காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்படி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களை வீழ்த்தி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் இரண்டாவது இன்னிங்சின் போது அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ஆனாலும் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த தொடரில் ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அனுபவ வீரராக இருக்கிறார். எனவே இவர்கள் இருவரில் யாரை வெளியேற்றிவிட்டு பும்ரா அணிக்குள் இணையப்போகிறார் என்ற பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இருப்பினும் இந்த முடிவை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் எடுப்பார் என்பது தெரிகிறது. ஏற்கனவே ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து கட்டாயம் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஆலோசனை செய்திருப்பார்கள் என்பதால் போட்டிக்கு முன்பே அவர்கள் முடிவை அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Advertisement