5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வழக்கம்போல துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியவாரே தொடர்வார்கள். அதே போன்று மூன்றாவது இடத்தில் வழக்கம் போல சுப்மன் கில் விளையாடுவார். அவருக்கு அடுத்து கடந்த மூன்று போட்டிகளாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கடைசி வாய்ப்பாக இந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

அதனை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் சர்பராஸ் கானும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பிடிப்பார்கள். ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேல் இடம் பெறுவார். அவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்களாக எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதை தொடர்ந்து பத்தாவது வீரராக கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா அணிக்கு திரும்புவதால் ஆகாஷ் தீப் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. மேலும் 11-வது வீரராக முகமது சிராஜ் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிகிறது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஒருவேளை தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் நிச்சயம் புதிய கேப்டன் அந்த 27 வயது வீரர்தானாம் – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) சர்பராஸ் கான், 6) ரவீந்திர ஜடேஜா, 7) துருவ் ஜுரேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement