ஒருவேளை தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் நிச்சயம் புதிய கேப்டன் அந்த 27 வயது வீரர்தானாம் – விவரம் இதோ

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த தொடர் துவங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : “புதிய சீசன், புதிய பொறுப்பு” என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இந்த ஆண்டு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி அடுத்த கேப்டனை அறிவித்துவிட்டு இந்த சீசன் முடிவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கணித்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி இதுவரை சென்னை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்துள்ள வேளையில் ஒருவேளை அவர் கேப்டன் பதிவிலிருந்து விலகும் பட்சத்தில் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு தோனி கேப்டன் பதிவிலிருந்து விலகி ஜடேஜாவிற்கு அந்த பதவியை வழங்கியிருந்தார். ஆனால் ஜடேஜா கேப்டன் பதவியில் மோசமாக செயல்படவே மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஒருவேளை தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் 27 வயதான இந்திய அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தான் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் தோனியின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் அவரிடம் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டுள்ளார். அதுமட்டும் இன்றி உள்ளூர் தொடரிலும் அவர் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதினால் அவரே அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக மாறப்போவது இவர்தானாம் – ஹார்டிக் பாண்டியா இல்லை

மேலும் ஜடேஜாவிற்கும் தற்போது 35 வயது ஆகிவிட்டதால் நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளுக்கு நிலையான கேப்டன் வேண்டும் என்பதினால் சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை தான் கேப்டனாக நியமிக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement