ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக மாறப்போவது இவர்தானாம் – ஹார்டிக் பாண்டியா இல்லை

Rohit-and-Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தற்போது 36 வயதை எட்டியுள்ள வேளையில் அடுத்த மாதம் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதன் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் அவர் விரைவில் ஓய்வினை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக பல வீரர்களுக்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் அண்மையில் பிசிசிஐ வெளியிட்ட வருடாந்திர வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானதில் இருந்து அந்த கருத்திற்கு மாற்று கருத்தும் இருந்து வருகிறது. அதாவது வருடாந்த ஒப்பந்த பட்டியலில் ஹார்டிக் பாண்டியா ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வீரராகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரையும் தாண்டி ஏ பிளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் சேர்ந்து பும்ராவும் இந்திய அணியின் அனுபவ வீரராக 7 கோடி பெறும் வீரராக இணைக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பும்ரா தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

எனவே ரோகித் சர்மா ஒருவேளை கேப்டன் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் பும்ராவே அடுத்த கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது, மேலும் ஒரு சில ஆண்டுகள் பும்ரா கேப்டனாக செயல்படும் வேளையில் அடுத்ததாக சுப்மன் கில் போன்ற இளம் வீரரை தான் நீண்ட கால கேப்டனாக மாற்றுவதற்கான முயற்சியிலும் பிசிசிஐ ஈடுபடும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 198 ரன்ஸ்.. கண்ணாடியை நொறுக்கிய எலிஸ் பெரி.. மந்தனா அதிரடியில் ஆர்சிபி கம்பேக் கொடுத்தது எப்படி?

அதனால் ஹார்டிக் பாண்டியா டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் கேப்டன் பதவியை பெற்றாலும் சில ஆண்டுகள் மட்டுமே அவர் கேப்டனாக செயல்பட முடியும் என்றும் மற்றபடி பும்ரா தான் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் ரோஹித் சர்மாவிற்கு அடுத்த நிரந்தர கேப்டனாக இருப்பார் என்றும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement