198 ரன்ஸ்.. கண்ணாடியை நொறுக்கிய எலிஸ் பெரி.. மந்தனா அதிரடியில் ஆர்சிபி கம்பேக் கொடுத்தது எப்படி?

WPL Ellis Perry
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் மார்ச் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற யூபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் ஸ்ருதி மந்தனா அதிரடியாக விளையாடினார்.

அவருடன் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து தடுமாற்றமாக விளையாடிய மேக்னா 28 (21) ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த எலிஸ் பெரி தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி 3 சிக்சரை விளாசி இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 80 (50) ரன்கள் குவித்து பெங்களூருவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நொறுக்கிய பெரி:
அதே போல மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய எலிஸ் பெரி நட்சத்திர வீராங்கனை தீப்தி சர்மா வீசிய ஒரு பந்தை இறங்கி வந்து மெகா சிக்ஸராக பறக்க விட்டார். அவர் அடித்த வேகத்திற்கு ராக்கெட் வேகத்தில் பறந்த பந்து மைதானத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாட்டா எலக்ட்ரிக் ஸ்பென்சர்ஷிப் காரின் ஜன்னல் கண்ணாடி கதவுகளை சுக்கு நூறாக உடைத்தது.

அதனால் தலையில் கை வைத்து பரிதாபத்தை காட்டிய அவர் தொடர்ந்து 4 பவுண்டரி 4 சிக்சருடன் 58 (37) ரன்கள் குவித்தார். கடைசியில் ரிச்சா கோஸ் 21* (10) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 198/3 ரன்கள் எடுத்தது. யூபி சார்பில் அஞ்சலி சர்வாணி தீப்தி சர்மா ஷோபி எக்லெஸ்டன் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 199 ரன்களை துரத்திய யூபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் கிரண் நவ்கிர் 18, சமாரி அட்டப்பட்டு 8, கிரேஸ் ஹரிஷ் 5, ஸ்வேதா செராவத் 1 ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் ஒரு கட்டத்தில் அலிசா ஹீலியும் அரை சதமடித்து போராடி 55 (38) ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் தீப்தி சர்மா அதிரடியாக 33 (22) ரன்களும் பூனம் கெம்னார் 31 (24) ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.

இதையும் படிங்க: வெறும் 3 ரன்ஸ்.. ஆறிய காயத்தில் வேலை பாய்ச்சிய வங்கதேச வீரர்.. கடைசி ஓவரில் செஞ்சு விட்ட இலங்கை

அதனால் 20 ஓவரில் யூபி அணியை 175/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக
சோபி டேவின், சோபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்கம், ஆசா ஷோபனா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியால் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement