வெறும் 3 ரன்ஸ்.. ஆறிய காயத்தில் வேலை பாய்ச்சிய வங்கதேச வீரர்.. கடைசி ஓவரில் செஞ்சு விட்ட இலங்கை

BAN VS SL 1
- Advertisement -

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 4 ஆம் தேதி சைலட் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு அபிஷ்கா பெர்னாண்டோவை ஆரம்பத்திலேயே 4 ரன்களில் சோரிஃபுல் இஸ்லாம் அவுட்டாக்கினார்.

அப்போது நேரமாச்சு சீக்கிரம் கிளம்புங்கள் என்ற வகையில் பெர்னான்டோவின் விக்கெட்டை அவர் சைகை காட்டி கொண்டாடியது இலங்கை ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதாவது 2023 உலகக் கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியினர் இலங்கையின் ஏஞ்சலோ மேத்தியூஸை பழுதான ஹெல்மெட்டை மாற்றிக் கொண்டிருந்த போது மனசாட்சியின்றி டைம்ட் அவுட் முறையில் அவுட்டாக்கினர்.

- Advertisement -

இலங்கை த்ரில் வெற்றி:
இலங்கை ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஐசிசி’யிடம் இருந்து தடைப்பெற்ற இலங்கை தற்போது போராடி மீண்டும் விளையாட துவங்கியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பை ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை இப்போட்டியில் கலாய்க்கும் வகையில் கொண்டாடிய சோரிஃபுல் இஸ்லாம் இலங்கை ரசிகர்களின் ஆறிய காயத்தில் வேலை பாய்ச்சுவது போன்ற வேலையை செய்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கமிந்து மெண்டிஸ் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்றொரு துவக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிரடியாக 59 (36) ரன்கள் விளாசினார். அவருடன் சமரவிக்ரமா எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி 61* (48) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் அசலங்கா 6 சிக்ஸருடன் 44* (21) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் வங்கதேசம் வெற்றி பெறுவதற்கு 207 என்ற பெரிய இலக்கை இலங்கை நிர்ணயித்தது.

- Advertisement -

அதை சேசிங் செய்த வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் 0, சௌமியா சர்க்கார் 12, கேப்டன் சாந்தோ 20, டௌஹித் ஹ்ரிடாய் 8 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 68/4 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய முகமதுல்லா அரை சதமடித்து 54 (31) ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் அவருடன் விளையாடிய ஜாகிர் அலி அரை சதமடித்து போராடியதால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்துக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் சானக்கா வீசிய அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரிசத் ஹொசைன் 0, ஜாகிர் அலி 68 (34) ரன்களில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: போட்டதே 24 பால்.. இதுல இத்தனை எக்ஸ்ட்ராவா? மதீஷா பதிரானாவின் சொதப்பலால் – சி.எஸ்.கே ரசிகர்கள் ஏமாற்றம்

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்ததாக வந்த சோரிஃபுல் இஸ்லாம் பவுண்டரி அடித்தும் 20 ஓவரில் வங்கதேசத்தை 203/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக இலங்கையை கலாய்த்த சோரிஃபுல் இஸ்லாம் 4* (2) ரன்கள் அடித்தும் வங்கதேசத்தை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை சார்பில் அதிகபட்சமாக பினுரா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சனாகா தாலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement