போட்டதே 24 பால்.. இதுல இத்தனை எக்ஸ்ட்ராவா? மதீஷா பதிரானாவின் சொதப்பலால் – சி.எஸ்.கே ரசிகர்கள் ஏமாற்றம்

Pathirana
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி இன்று மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

- Advertisement -

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், சமர விக்கிரமா 61 ரன்களையும், கேப்டன் அசலங்கா 44 ரன்களையும் குவித்தனர். பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்ததால் இலங்கை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக முகமதுல்லா 54 ரன்களையும், ஜேக்கர் அலி 68 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா 4 ஓவர்கள் மட்டுமே வீசிய வேளையில் 56 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி முக்கிய வீரராக பார்க்கப்படும் மதீஷா பதிரனாவின் மோசமான செயல்பாடு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் மட்டுமே அதாவது 24 பந்துகளை வீசிய அவர் 10 வொயிடு மற்றும் 3 நோ பால்களை வீசி 13 எக்ஸ்ட்ராக்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : காயமடைந்த டேவான் கான்வேவிற்கு பதிலாக அந்த இங்கிலாந்து வீரரை வாங்குங்க – ரசிகர்கள் கோரிக்கை

மேலும் இந்த போட்டியின் போது லேசான காயம் அடைந்த அவர் மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் இவர் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது சிஎஸ்கே அணியின் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement