காயமடைந்த டேவான் கான்வேவிற்கு பதிலாக அந்த இங்கிலாந்து வீரரை வாங்குங்க – ரசிகர்கள் கோரிக்கை

Conway-and-Salt
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைசெய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது சீசனானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இதன் காரணமாக தற்போது சென்னை அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னை அணியின் நட்சத்திர வீரரான டேவான் கான்வே காயமடைந்துள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் போது காயமடைந்த டேவான் கான்வே தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்து வரும் வேளையில் அவருக்கு கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக செய்யப்பட்ட பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டைவிரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் 8 வாரங்கள் ஓய்வு தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே மாதம் வரை அவரால் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப முடியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை அணி அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே அணி உள்ளது. ஏற்கனவே கான்வேவிற்கு மாற்று வீரர் அணியில் இருந்தாலும் அவருக்கான இடத்தை நிரப்ப சரியான மாற்றுவீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சென்னை அணியின் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர் ஒருவரை கான்வேவிற்கு பதிலாக தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மினி ஏலத்தில் விலை போகாத இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான பில் சால்ட்டை ஒப்பந்தம் செய்யலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக t20 போட்டிகளில் அறிமுகமான பில் சால்ட் இதுவரை 21 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 166 ஸ்ட்ரைக்ரேட்டில் 639 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம்.. வேடிக்கையான காரணத்திற்காக பாதிக்கப்பட உள்ள 5வது போட்டி? இந்தியா வெல்லுமா

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய அவர் 9 போட்டிகளில் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 அரைசதங்கள் அடித்து 218 ரன்கள் அடித்துள்ளதால் அவரை சேர்க்குமாறு ரசிகர்கள் கோரிக்கையை வைத்து வருகின்றனர். இருப்பினும் சிஎஸ்கே அணியின் தேர்வு எவ்வாறு இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement