இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம்.. வேடிக்கையான காரணத்திற்காக பாதிக்கப்பட உள்ள 5வது போட்டி? இந்தியா வெல்லுமா

IND VS ENG Dharamsala
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மார்ச் ஏழாம் தேதி துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஏற்கனவே கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்று அடம் பிடித்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.

இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பிரதாய கடைசி போட்டியில் வென்று 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இங்கிலாந்தும் போராட உள்ளது. அந்த வகையில் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

பனி மலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தரம்சாலா மைதானம் உலகிலேயே மிகவும் அழகான மைதானங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த அழகான மைதானம் என்று கேட்டால் உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் கொஞ்சமும் யோசிக்காமல் தரம்சாலா என்று சொல்லுவார்கள்.

இந்நிலையில் தரம்சாலாவில் இப்போட்டி நடைபெறும் முதல் நாளில் இரவு நேரத்தில் -4 டிகிரி என்றளவில் நிலவும் வெப்பம் பகல் நேரத்தில் 1 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இந்தப் போட்டியின் முதல் 2 நாட்கள் அவ்வப்போது பனிமழையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. மேலும் லேசான மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த வருடம் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் இம்மைதானத்தில் நடைபெற்ற போட்டி மூடுபனியால் தடை பெற்று மீண்டும் நடந்தது.

- Advertisement -

இருப்பினும் இம்முறை சற்று வித்தியாசமாக பனி மழை பெய்து போட்டி தடை பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் இப்படி குளிர்ந்த வானிலை நிலவும் என்பது இங்கிலாந்து வீரர்களுக்கு தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுவதை போன்ற உணர்வை கொடுக்கும். குறிப்பாக மேகமூட்டத்துடன் குளிரும் இருந்தால் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை அதிகமாக ஸ்விங் செய்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார்.

இதையும் படிங்க: என்ன நினச்சுட்டு இருக்கீங்க.. பிளேயிங் லெவன் கூட செட்டாகாது.. ஹைதெராபாத் தவறை விமர்சித்த இர்பான் பதான்

அந்த வகையில் தரம்சாலா மைதானம் இந்தியாவை விட இங்கிலாந்துக்கு இம்முறை அதிக சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் கடைசி 3 நாட்களில் நல்ல வெயில் அடிக்கும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே அதை பயன்படுத்தி வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement