என்ன நினச்சுட்டு இருக்கீங்க.. பிளேயிங் லெவன் கூட செட்டாகாது.. ஹைதெராபாத் தவறை விமர்சித்த இர்பான் பதான்

Irfan Pathan 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த 10 அணிகளுக்கு மத்தியில் 2016க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்களுடைய புதிய கேப்டனாக 20.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் பட் கமின்ஸ் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக 2023 எஸ்ஏ20 தொடரில் ஹைதராபாத் அணியின் கிளையான ஈஸ்டர்ன் கேப் அணிக்கு முதல் வருடத்திலேயே தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக கேன் வில்லியம்சனை கழற்றி விட்ட ஹைதராபாத் நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது. இருப்பினும் அவருடைய தலைமையில் 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

இர்பான் பதான் விமர்சனம்:
ஆனாலும் 2024 எஸ்ஏ தொடரில் மீண்டும் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த மார்க்கம் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். அதன் காரணமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை கழற்றி விட்ட ஹைதராபாத் நிர்வாகம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை ஒரே வருடத்தில் வென்று சாதனை படைத்த பட் கமின்ஸை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐடன் மார்க்ரமை கழற்றி விட்டு பட் கமின்ஸை கேப்டனாக அறிவித்துள்ள ஹைதராபாத் அணியின் அணுகுமுறை தவறாக இருப்பதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இதனால் பிளேயிங் லெவனை கூட சரியாக வடிவமைக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் என்று பேசும் போது நீங்கள் பட் கமின்ஸை தாண்டி யோசிக்க மாட்டீர்கள். ஏனெனில் சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக அசத்தி வருகிறார்”

- Advertisement -

“ஆனால் பிரச்சனை என்னவெனில் டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் என்பது ஒன்றுமல்ல. அதற்கேற்றார் போல் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் பட் கமின்ஸ் செயல்பாடுகளும் புள்ளிவிவரங்களும் நன்றாக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹைதராபாத் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது? அவர்கள் இங்கே மிகப்பெரிய நகர்வை செய்துள்ளனர். கமின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டால் மார்க்ரம் நிலை என்ன”

இதையும் படிங்க: முதுகு வலியோட இந்திய அணியை காப்பாத்துனாரு.. 100வது போட்டிக்கு முன் அஸ்வின் அரிப்பணிப்பை பாராட்டிய புஜாரா

“ஒருவேளை அவர்கள் இருவரும் விளையாடினால் ஹசரங்கா விளையாடும் 11 பேர் அணியில் விளையாடுவது கடினம். அதே போல மார்கோ யான்சென், ஹென்றிச் க்ளாஸென் போன்ற தரமான வெளிநாட்டு வீரர்கள் வெளியே உட்கார வேண்டிய நிலை வரலாம். எனவே கேப்டன்ஷிப்பை விடுங்கள் முதலில் ஒரு பவுலராக பட் கமின்ஸ் நன்றாக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement