பாகிஸ்தான் டீம் பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. அந்த டீமும் ரொம்ப டேஞ்சர் தான். ரோஹித் சர்மாவை எச்சரித்த – கவாஸ்கர்

Gavaskar-and-Rohit
- Advertisement -

கடந்த முறை ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இம்முறை ரோகித் சர்மாவின் தலைமையில் மீண்டும் பலம் பெற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை இந்த ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்து அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கண்டியில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நேபாள் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் மட்டுமல்ல இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கேப்டன் ரோஹித் சர்மாவை எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஆசிய கோப்பை தொடரை பொறுத்தவரை எப்பொழுதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி பற்றி தான் பலரும் பேசி வருகின்றார்கள். ஆனால் இலங்கை அணியையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் நடப்பு சாம்பியனாக இருக்கும் அவர்கள் நிச்சயம் இம்முறையும் கோப்பையை தக்க வைக்க பெரிய அளவில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள்.

- Advertisement -

எனவே இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கவாஸ்கர் கூறியது போலவே இந்தியாவிற்கு அடுத்து அதிக முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 15 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஏழு முறையும், இலங்கை அணி 6 முறையும் ஆசிய கோப்பை கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் பத்தி டிராவிட் சொல்வதில் எந்தவொரு கேரன்டியும் இல்ல. இது நல்லதும் கிடையாது – முகமது கைப் விமர்சனம்

அது மட்டும் இன்றி கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையையும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தான் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இம்முறையும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement