கே.எல் ராகுல் பத்தி டிராவிட் சொல்வதில் எந்தவொரு கேரன்டியும் இல்ல. இது நல்லதும் கிடையாது – முகமது கைப் விமர்சனம்

Mohammed-Kaif
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கிய செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்த ஆசிய கோப்பை தொடரானது 50 ஓவர் போட்டிகளாக நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இலங்கை சென்றடைந்துள்ள வேளையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கே;எல் ராகுல் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் நேற்று வெளியாகியது.

- Advertisement -

இதன்காரணமாக இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு ஆட்டங்களில் இஷான் கிஷனே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. கே.எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதனை இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடும் நேற்று உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணி முன்னாள் வீரரான முகமது கைஃப் கூறுகையில் : கே.எல் ராகுல் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாக்கியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் அவர் இந்த போட்டிகளில் விளையாடினால் மேலும் காயம் அதிகரிக்கலாம் என்பது தான்.

- Advertisement -

எனவே அவர் என்னை பொருத்தவரை அடுத்த இரண்டு போட்டிகளுக்கு பிறகு முழு உடற்தகுதியுடன் இருப்பார் என்கிற எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. எனவே டிராவிட் வெளியிட்ட இந்த செய்தி ரசிகர்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : வீடியோ : 4 பந்தில் 11 ரன் தேவை. மனிஷ் பாண்டேவின் சாகசத்தால் கோப்பையை தட்டி சென்ற ஹுப்ளி டைகர்ஸ்

அதோடு அவருடைய ரெக்கார்டும் ஐந்தாவது இடத்தில் மிக சிறப்பாக இருக்கிறது. அவரால் இன்னிங்சை சீராக விளையாடவும் முடியும். தேவைப்பட்டால் பெரிய பெரிய ஷாட்களையும் விளையாட முடியும். அந்த அளவிற்கு அவருக்கு ஒரு சிறப்பான வீரர். அதோடு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான அவர் இறுதி கட்டத்திலும் அற்புதமாக ஆடுவார் என்பதனால் அவரது இருக்கை இந்திய அணிக்கு மிக முக்கியமானது என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement