4 பந்தில் 11 ரன் தேவை. மனிஷ் பாண்டேவின் சாகசத்தால் கோப்பையை தட்டி சென்ற ஹுப்ளி டைகர்ஸ்

Manish-Pandey
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருவது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் டி20 பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடரானது நடைபெறுவது போன்று இந்தியா முழுவதுமே பல மாநிலங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநிலத்தினை சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் மகாராஜா டிராபி தொடரானது நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது ஆகஸ்ட் 29-ஆம் தேதி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிறைவு பெற்றது.

- Advertisement -

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மணிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியும், கருண் நாயர் தலைமையிலான மைசூர் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மைசூர் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததால் ஹூப்ளி டைகர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்து அசத்தியது. ஹூப்ளி அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரர் தாகா 72 ரன்களும், கேப்டன் மனிஷ் பாண்டே 50 ரன்களையும் குவித்து அசித்தினர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே குவித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹூப்ளி அணி வெற்றி பெற்று மகாராஜா டிராபி தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு நான்கு பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மைசூர் வீரர் ஜெகதீசா சுஜித் சிக்சர் அடிக்க முயற்சித்து பந்தை உயரமாக தூக்கி அடித்தார். அப்போது பவுண்டரி லைனின் எல்லையில் இருந்த மனிஷ் பாண்டே பந்தை எப்படியும் சிக்ஸருக்கு விடக்கூடாது என்பதனால் தெளிவாக யோசித்து பறந்த படி அந்தப் பந்தை பிடித்து சரியான நேரத்திற்குள் மைதானத்திற்குள் தூக்கி போட்டு விட்டார்.

இதையும் படிங்க : எங்களை பாத்தா பிச்சைகாரங்க மாதிரி இருக்கா? 2023 உ.கோ டிக்கெட் பற்றி ஜெய் ஷா மீது ரசிகர்கள் கொந்தளிப்பு – காரணம் இதோ

அவரின் அந்த அற்புதமான பீல்டிங்கால் அந்த பந்து சிக்ஸருக்கு செல்லாமல் போனது. அதுமட்டுமின்றி இறுதியில் அவர்களது அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகவும் அவரது பீல்டிங் அமைந்தது. அவரது இந்த அட்டகாசமான பீல்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement