எங்களை பாத்தா குப்பை மாதிரி இருக்கா? 2023 உ.கோ டிக்கெட் பற்றி ஜெய் ஷா மீது ரசிகர்கள் கொந்தளிப்பு – காரணம் இதோ

jays Shah world cup
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களை போல அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் இத்தொடர் நடைபெறுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.

இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதி அதில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் 2 அணிகள் நவம்பர் 19ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் என்ற வகையில் இத்தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவத்தில் சவாலான எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

ரசிகர்கள் பிச்சைக்காரங்களா:
முன்னதாக இத்தொடருக்கான அட்டவணையை மாநில வாரியங்களுடன் இணைந்து விவாதிக்காமல் உருவாக்காமல் பிசிசிஐயின் தவறான அணுகுமுறையால் மீண்டும் அப்டேட் செய்யப்பட்ட புதிய அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. அத்துடன் டிஜிட்டல் இந்தியா என்ற மார்தட்டும் அரசியல் வாரிசாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருந்தும் இத்தொடருக்கான டிக்கெட் ஆன்லைன் வாயிலாக கொடுக்கப்படாது என்றும் மைதானங்களில் கவுன்டர்களில் ரசிகர்கள் அடித்துக்கொண்டு வாங்க வேண்டுமென ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால் ஐசிசியின் அறிவுறுத்தலின்படி கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தது. குறிப்பாக முதலில் ஐசிசி இணையத்தில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொண்டு பின்னர் ரசிகர்கள் “புக்மைஷோ” எனும் இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நிலைமையில் 29ஆம் தேதியன்று பங்கேற்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது.

- Advertisement -

ஆனால் அதற்கு விண்ணப்பித்த பின் 3 முதல் 5 மணி நேரங்கள் “ஆன்லைன் க்யூவில்” காத்திருக்க வேண்டும் என்று அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. குறிப்பாக புக்மைஷோ செயலி அல்லது இணையத்தில் டிக்கெட்டுக்கு விண்ணப்பித்த பின் மொபைல் அல்லது கணினியில் முன்னோக்கி பின்னோக்கி செல்லாமல் அப்படியே ரசிகர்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றும் ஒருவேளை அந்த இடத்திலிருந்து வெளியேறினால் மீண்டும் முதலிலிருந்து விண்ணப்பித்து மீண்டும் 5 மணி நேரங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று காண்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சவுரவ் கங்குலி

அதிலும் சிலருக்கு 4 மாதம் முதல் 4 வருடம் காத்திருக்க வேண்டுமேன காட்டுவதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள் எங்களைப் பார்த்த குப்பையை போல் தெரியுதா? என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் அதிக நெரிசல் ஏற்படும் என்பது தெரிந்தும் அதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாய் சரியாக கையாள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் ரசிகர்கள் சாடுகின்றனர்.

Advertisement