ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை பாகிஸ்தான் நாட்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்களில் நான்கு ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள ஒன்பது ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணியாக பார்க்கப்படும் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதோடு இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்று அதே முமென்டத்துடன் உலக கோப்பை தொடரையும் எதிர்கொள்ள காத்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆசியக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி தனது கருத்தினை தெரிவித்து அவரது விருப்பத்திற்கான பிளேயிங் லெவனை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பிளேயிங் லெவன் பட்டியலில் : ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களா இடம் பிடித்துள்ளனர். மேலும் மூன்றாவது இடத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று மிக முக்கியமான மாற்றமாக ஐந்தாவது இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக ரவீந்திர ஜடேஜாவை முன்கூட்டியே தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்தில் கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ள அவர் மேலும் 7, 8 இடங்களில் ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி, ஏ.பி.டி சொல்றது எல்லாம் வேலைக்காதது. விராட் கோலிக்கு பொசிஷன் குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து

அதேபோன்று 9-ஆவது இடத்தில் குல்தீப் யாதவையும், 10-ஆவது மற்றும் 11-ஆவது இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் சவுரவ் கங்குலி வெளியிட்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரவீந்திர ஜடேஜா, 6) கே.எல் ராகுல், 7) ஹார்டிக் பாண்டியா, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஐஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது ஷமி.

Advertisement