ரவி சாஸ்திரி, ஏ.பி.டி சொல்றது எல்லாம் வேலைக்காதது. விராட் கோலிக்கு பொசிஷன் குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash-Chopra
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த தொடர் தற்போது இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணி இந்த தொடருக்காக இலங்கை சென்றடைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாட மாட்டார் என்பதால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ்-சும் விராட் கோலி நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடினால் அது இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருந்தனர். விராட் கோலி தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் நான்காவது இடத்தில் விளையாடி 39 இன்னிங்ஸ்களில் 1767 ரன்களை குவித்துள்ளார்.

அதனை தவிர்த்து கடந்த 10 ஆண்டுகளாகவே விராட் கோலி நம்பர் 3-ஆம் இடத்தில் இறங்கி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ரவி சாஸ்திரி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் கூறுவதெல்லாம் வேலைக்காகாது என்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி நான்காவது இடத்தில் களமிறங்கி நன்றாகத்தான் விளையாடி உள்ளார். ஆனால் அவர் மூன்றாவது இடத்தில் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மூன்றாம் இடத்தில் களமிறங்கி இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த டைம் ஆசிய கோப்பை தக்க வைக்குறது கஷ்டம் தான் – 4 முக்கிய வீரர்கள் இல்லாத அணியை வெளியிட்ட நடப்பு சாம்பியன் இலங்கை

எனவே அவரை மூன்றாவது இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஒருவேளை கே.எல் ராகுல் விளையாடவில்லை என்றால் அந்த இடத்தில் இஷான் கிஷனை விளையாட வைக்கலாம். விராட் கோலி இதுவரை நான்காம் இடத்தில் 210 இன்னிங்ஸ்களில் விளையாடி 10000-க்கும் மேற்பட்ட ரன்களையும், 39 சதங்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement