இந்த டைம் ஆசிய கோப்பை தக்க வைக்குறது கஷ்டம் தான் – 4 முக்கிய வீரர்கள் இல்லாத அணியை வெளியிட்ட நடப்பு சாம்பியன் இலங்கை

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பை தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன. ஆனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கை மட்டும் காயத்தை சந்தித்த முக்கிய வீரர்கள் திரும்புவதற்காக காத்திருந்ததால் தங்களுடைய அணியை அறிவிப்பதில் தாமதம் செய்து வந்தது.

குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வரும் இலங்கை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் கத்துக்குட்டியாக களமிறங்கியது. ஆனாலும் தசுன் சனக்கா தலைமையில் ஆரம்பத்தில் சந்தித்த தோல்வியிலிருந்து கொதித்தெழுந்து சூப்பர் 4 சுற்றில் இந்தியாவையே தோற்கடித்த இளம் இலங்கை அணி மாபெரும் ஃபைனலில் பாகிஸ்தானையும் பந்தாடி 6வது முறையாக ஆசியக் கோப்பை வென்று சரித்திரம் படைத்தது. அதே துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் மகத்தான வெற்றியாக அந்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

4 வீரர்கள் விலகல்:
அந்த நிலைமையில் இம்முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாரியங்களுக்கு இடையேயான சண்டையால் இந்த ஆசிய கோப்பையின் பெரும்பாலான போட்டிகளை தங்களுடைய சொந்த மண்ணிலேயே விளையாடும் பொன்னான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. அதன் காரணமாக சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் இந்தியா போன்ற அணிகளுக்கு சவாலை கொடுத்து மீண்டும் இலங்கை கோப்பையை தக்க வைக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் துஷ்மாந்தா சமீரா, லஹிரு குமாரா, தில்சான் மதுசங்கா ஆகிய 3 வீரர்கள் சமீபத்தில் களமிறங்கிய தொடர்களில் காயமடைந்து இன்னும் முழுமையாக குணமடையாமல் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையின் கருப்பு குதிரையாக கருதப்படும் அணிந்து வணிந்து ஹஸரங்கா சமீபத்திய இலங்கை பிரீமியர் லீக் டி20 தொடரில் சந்தித்த காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் அணியை அறிவிப்பதற்கான கடைசி நேரம் முடிந்து போனதால் வேறு வழியின்றி அந்த 4 வீரர்களும் இல்லாமல் சற்று முன் இலங்கை தங்களுடைய ஆசிய கோப்பை அணியை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதனால் இம்முறை ஆசிய கோப்பையை இலங்கை தக்க வைப்பது சற்று கடினமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஹஸரங்காவுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்திய மஹீஸ் தீக்சனா, மதிசா பதிரனா போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 2023 ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி இதோ:

இதையும் படிங்க: சிய கோப்பையில் இந்தியா அசால்ட்டா பாகிஸ்தானை 3 – 0 ன்னு தோற்கடிக்கும் பாருங்க – முன்னாள் இந்திய வீரர் மாஸ் கணிப்பு

தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணரத்னே, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ்(துணை கேப்டன்), சரித் அஸலாங்கா, தனஞ்சயா டீ சில்வா, சதீரா சமரைவிக்ரமா, மஹீஸ் தீக்ஷனா, துணித் வெல்லலேக், மதீஷா பதிரானா, கௌசன் ரஜிதா, டுஷன் ஹேமந், பினுரா பெர்னாண்டோ, பிரமோட் மடுஷன்

Advertisement