ஆசிய கோப்பையில் இந்தியா அசால்ட்டா பாகிஸ்தானை 3 – 0 ன்னு தோற்கடிக்கும் பாருங்க – முன்னாள் இந்திய வீரர் மாஸ் கணிப்பு

VIrat Kohli IND vs PAK
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 தொடர் 50 ஓவர் போட்டிகளாக ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற ஆகிய கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இம்முறை 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் அதற்கு வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் நிறைய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் கத்துக் குட்டியாக பார்க்கப்படும் இலங்கை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து ஃபைனலுக்கு கூட தகுதி தகுதி பெற விடாமல் வெளியேற்றி கோப்பையை வென்றது.

- Advertisement -

மாஸ் கணிப்பு:
அதே போலவே கடந்த வருடம் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த பாகிஸ்தான் ஃபைனல் செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பியதில் முக்கிய பங்காற்றியது. போதாகுறைக்கு சமீபத்தில் இதே இலங்கையில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ள பாகிஸ்தான் இம்முறையும் இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நிகரான தரத்தையும் திறமையும் கொண்டிருப்பதால் இந்த தொடரில் நிச்சயம் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வெல்லும் என முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக கணித்துள்ளார். அதாவது இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் லீக் சுற்றில் 1 முறையும் சூப்பர் 4 சுற்றில் 1 முறையும் மோதி ஃபைனலில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

- Advertisement -

எனவே அந்த 3 போட்டிகளிலும் பாகிஸ்தானி தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் நல்ல அணியாகும். அவர்களுடைய நல்ல திறமையும் நுணுக்கங்களும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அதே போலவே இந்திய அணியும் எந்த வகையிலும் குறைந்ததல்ல. எனவே இந்த தொடரில் இவ்விரு அணிகளுடன் 3வது அணியும் (இலங்கை) கடுமையாக போட்டியிடும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: 18 மாசமா ஆள் கிடைக்கல ஆனா நான் சோதனை பண்ணியே டீம கெடுத்துட்டேனே? ரசிகர்களுக்கு – டிராவிட் கோபமான பதிலடி

“இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை பொறுத்த வரை என்னுடைய கணிப்பு எப்போதுமே 3 – 0 கணக்கில் இந்திய அணி வெல்லும் என்பதாகும். அதே சமயம் அந்த வெற்றிகள் இந்திய அணிக்கு அவ்வளவு சுலபமாக கிடைத்து விடப்போவதில்லை” என்று கூறினார். இதை தொடர்ந்து தர வரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் ஷாஹின் அஃப்ரிடி போன்ற தரமான பவுலர்களையும் கொண்ட பாகிஸ்தானை இத்தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியா தோற்கடித்து வெற்றி வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement