18 மாசமா ஆள் கிடைக்கல ஆனா நான் சோதனை பண்ணியே டீம கெடுத்துட்டேனே? ரசிகர்களுக்கு – டிராவிட் கோபமான பதிலடி

- Advertisement -

சொந்த மண்ணில் வரும் அக்டோபர் 5 முதல் துவங்கும் 2023 உலகக் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அதற்கு தயாராகும் வகையில் 2023 ஆசிய கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. அதற்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் அறிவித்தது ரசிகர்களை நிம்மதியடைய வைத்தது.

குறிப்பாக அந்த வீரர்களின் வருகையால் இந்திய அணியில் நிலவிய நம்பர் 4வது பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்துக்கான பிரச்சனை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாத அவர்கள் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ராகுல் மீண்டும் லேசான காயத்தை சந்தித்துள்ளதால் இந்த ஆசிய கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ட்ராவிட்டின் பதிலடி:
குறிப்பாக பயிற்சியாளராக பொறுப்பேற்றாத முதல் கடந்த ஒன்றரை வருடங்களாக சோதனை என்ற பெயரில் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தியும் ராகுல் டிராவிட்டால் நம்பர் 4வது விளையாடுவதற்கும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கும் சில மாற்று பேக்-அப் வீரர்களை உருவாக்க முடியவில்லை என ரசிகர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் கடந்த 18 மாதங்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் அனைவரும் தாம் தேவையற்ற மாற்றங்களை அரங்கேற்றி அணியை கெடுப்பதாக விமர்சிப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எங்களின் சோதனை என்ற வார்த்தை சில சமயங்களில் யோசிக்காமல் வெகுவாகத் தூக்கி எறியப்படுகிறது. பரிசோதனைக்காக நாம் எதையாவது பரிசோதனை செய்ய முயற்சிக்கிறோம் என்று அனைவரும் நினைக்கிறார்கள்”

- Advertisement -

“குறிப்பாக 4, 5வது இடத்தில் விளையாடுவதற்கு தேவையானவர்களை உருவாக்கவில்லை என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் சில சமயங்களில் நீங்கள் எதையாவது செய்யும் போது அதன் பின்னணியில் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும். இருப்பினும் 18 மாதத்திற்கு முன்பே ராகுல், பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் அந்த இடத்திற்கு விளையாடுவதற்கு தேர்வு செய்தோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 3 பேருமே 2 மாத இடைவெளியில் காயத்தை சந்தித்து வெளியேறினார்கள்”

இதையும் படிங்க: கேஎல் ராகுல் வெளியேற்றம் ஒருபுறம், கொண்டத்தில் ஈடுபட்ட போட்டோ போட்ட சஞ்சுவின் மனைவி மறுபுறம் – எல்லாம் இவருக்காவே சேந்து அமஞ்ச மாதிரி இருக்கு

“குறிப்பாக அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக செயல்பட்ட அந்த மூவரும் அப்படி வெளியேறுவார்கள் என்பதை யாரும் கணிக்க முடியாது. அதனால் நீங்கள் அந்த இடத்தில் புதியவர்களை சோதித்து பார்க்க நிலைமைக்கு வந்தீர்கள்” என்று கூறினார். அத்துடன் முதல் 2 போட்டிகளை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பையில் முழுமையாக விளையாடும் அளவுக்கு ராகுல் குணமடைந்து விடுவார் என்றும் ராகுல் டிராவிட் உறுதியாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement