கேஎல் ராகுல் வெளியேற்றம் ஒருபுறம், கொண்டத்தில் ஈடுபட்ட போட்டோ போட்ட சஞ்சுவின் மனைவி மறுபுறம் – எல்லாம் இவருக்காவே சேந்து அமஞ்ச மாதிரி இருக்கு

Sanju Samson Wife
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா தம்முடைய முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் வழக்கம் போல சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது பெரிய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2019 வரை குப்பையை போல பயன்படுத்தப்பட்டு வந்த அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடியதன் பயனாக 2021ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனாலும் அவரை ரசிகர்களின் கோபத்தை தணிப்பதற்காக இந்த ஆசிய கோப்பையில் வெறும் பேக்-அப் வீரராக மட்டும் தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே அசத்ததாத சூரியகுமார் யாதவை நேரடியாக தேர்வு செய்தது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 24.43 என்ற மோசமான சராசரியை கொண்டிருக்கும் சூரியகுமாரை விட 55.71 என்ற சிறப்பான சராசரியை கொண்டிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

கொண்டாடிய மனைவி:
அதை விட இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத போதிலும் திலக் வர்மாவுக்கு நேரடியாக கிடைத்த வாய்ப்பு சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ரசிகர்களின் குமுறலாக இருக்கிறது. அந்த நிலையில் ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் சந்தித்தால் லேசான காயத்தால் முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இஷான் கிசான் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதற்கு முன் பெரும்பாலும் டாப் ஆர்டரில் துவக்க வீரராக மட்டுமே களமிறங்கி வெற்றிகரமாக செயல்பட்டுள்ள இஷான் கிசான் மிடில் ஆர்டரில் அசத்தியதில்லை. மறுபுறம் வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் கூட மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அதன் காரணமாக கடைசி நேரத்தில் ஆசிய கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகளில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட தேர்வு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த நிலையில் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியுள்ள இந்த சமயத்தில் தம்முடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சஞ்சு சாம்சன் மனைவி சாருலதா ரமேஷ் அனைவருக்கும் ஓனம் வாழ்த்துக்களை தெரிவித்து கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதையும் படிங்க: கே.எல் ராகுல் வெளியேற்றத்தால் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் – ஏற்படவுள்ள மாற்றம்

குறிப்பாக ஓணம் நாளன்று கேஎல் ராகுல் வெளியேறியது தம்முடைய கணவருக்கு கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் வகையில் இருப்பதால் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் சஞ்சு சம்சனின் மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்களும் உண்மையாகவே கடவுளின் ஆசிர்வாதத்தால் சஞ்சு சம்சானுக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement