கே.எல் ராகுல் வெளியேற்றத்தால் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் – ஏற்படவுள்ள மாற்றம்

Rohit-and-Rahul
- Advertisement -

நாளை ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதி வரை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் இந்திய அணி தற்போது பயிற்சி முகாமினை முடித்துவிட்டு இலங்கை நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த தொடரில் இடம் பெற்றிருந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் தற்போது முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வழக்கம் போல கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக ஐந்தாவது இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது நீக்கத்தால் அணிக்குள் இஷான் கிஷன் நுழைகிறார்.

அப்படி அவர் அணியில் நுழைந்தால் நிச்சயம் அவர் சுப்மன் கில்லுடன் இணைந்து துவக்க வீரராகவே விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது.

- Advertisement -

அந்த வகையில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரராக களம் இறங்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று மூன்றாம் இடத்தில் விளையாடி வரும் விராட் கோலி நான்காவது இடத்திலும், நான்காவது இடத்தில் விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்திலும் விளையாட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 2023 உலக கோப்பையில் அவர் தான் அதிக விக்கெட்களை எடுப்பாரு – ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் சிம்பிளான கணிப்பு

அவர்களைத் தொடர்ந்து ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. இப்படி ராகுல் ஒருவரின் வெளியேற்றத்தால் இந்திய அணி மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement