2023 உலக கோப்பையில் அவர் தான் அதிக விக்கெட்களை எடுப்பாரு – ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் சிம்பிளான கணிப்பு

Viv Richards
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 போன்ற வருடங்களை போல் அல்லாமல் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இத்தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள வெற்றிகரமான ஆஸ்திரேலியா, கருப்பு குதிரை நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அந்த வெளிநாட்டு அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த நிலையில் இத்தொடரில் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்க உள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து போட்டியின் எந்த நேரத்திலும் விக்கெட்களை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

ரிச்சர்ட்ஸ் கணிப்பு:
அப்படிப்பட்ட அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அபாரமான கம்பேக் கொடுத்ததால் இந்த உலகக்கோப்பையில் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பும்ராவை விட இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி தான் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுக்கும் பவுலராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் முன்னாள் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கணித்துள்ளார்.

குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் செயல்பட்ட போது அவருடைய திறமையை அருகிலிருந்து பார்த்ததால் உலகின் இதர பவுலர்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளுவர் என்று நம்புவதாக தெரிவிக்கும் ரிச்சர்ட்ஸ் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை எடுக்கும் பவுலராக ஷாஹின் அப்ரிடி இருப்பார். ஏனெனில் நான் அவரை பாகிஸ்தானில் பார்த்துள்ளேன். குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்”

- Advertisement -

“அப்போது அவருடைய அதிகப்படியான வளர்ச்சியை நான் அருகிலிருந்து கண்டுள்ளேன். அவர் மிகவும் நேர்த்தியான தனிநபர் வீரர். மேலும் அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர்” என்று ஐசிசி இணையத்தில் பேசினார். அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு அபாரமாக ஷாஹின் அப்ரிடி 2021 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: அணியின் நலனுக்காக ஆடுனது தப்பா போச்சு, 2019க்குப்பின் என்னோட பேட்டிங் சரிவுக்கு அதான் காரணம் – ஹிட்மேன் சர்மா பேட்டி

மேலும் பும்ராவை போலவே காயத்திலிருந்து குணமடைந்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இதுவரை 39 ஒருநாள் போட்டிகளில் 76 விக்கெட்களை 5.42 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து வருகிறார். இருப்பினும் இந்திய மண்ணில் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் தான் அவர் விளையாட உள்ளது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement