அணியின் நலனுக்காக ஆடுனது தப்பா போச்சு, 2019க்குப்பின் என்னோட பேட்டிங் சரிவுக்கு அதான் காரணம் – ஹிட்மேன் சர்மா பேட்டி

Rohit
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா விரைவில் துவங்கும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் மாபெரும் கௌரவத்தையும் பொறுப்பையும் பெற்றுள்ளார். மும்பையைச் சேர்ந்த அவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடினாலும் 2013க்குப்பின் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்து இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார். அதற்கிடையே ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றதால் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு உழைப்பால் முன்னேறியுள்ளார்.

இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் வெற்றிக்கு போராடிய அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஹிட்மேன் என்ற தன்னுடைய பட்டப்பெயருக்கேற்றார் போல் அல்லாமல் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருவதால் விமர்சனங்களை சந்தித்துள்ளார். எனவே அதற்கு இந்த ஆசிய மற்றும் உலக கோப்பையில் பதிலடி கொடுக்கும் வகையில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு கோப்பைகளை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் களமிறங்க உள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

சரிவுக்கு காரணம்:
இந்நிலையில் சமீப காலங்களில் ரன்களை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக 105 – 110 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே தம்முடைய பேட்டிங்கில் சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்களை விளையாட முயற்சிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் சற்று அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறேன். அதனாலேயே சமீப காலங்களில் என்னுடைய புள்ளி விவரங்கள் சற்று குறைந்து போயுள்ளன”

“குறிப்பாக சமீப காலங்களில் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்துள்ளது. ஆனால் பேட்டிங் சராசரி குறைந்துள்ளது. அதனால் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் நான் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். இருப்பினும் அது ரிஸ்க் எடுத்து விளையாடுவதால் நடைபெறவில்லை. என்னுடைய கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 90 என்றளவில் இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக என்னுடைய ஸ்கோர்களில் ஸ்ட்ரைக் ரேட்டை நீங்கள் பார்க்கும் போது அது 105 – 110 அளவில் இருக்கும்”

- Advertisement -

“எனவே அதை நீங்கள் பார்த்து திருப்தியடைய வேண்டியதுயுள்ளது. மேலும் இங்கே 55 பேட்டிங் சராசரி மற்றும் 110 ஸ்ட்ரைக் ரேட்டில் கேரியர் முழுவதும் விளையாடுவது அசாத்தியமற்றதாகும். எனவே என்னுடைய விருப்பப்படி அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுகிறேன். இருப்பினும் இங்கே பலரும் 150 – 170 போன்ற பெரிய ரன்களை எடுக்க விரும்புகிறார்கள். நானும் இப்போதும் அதை செய்ய விரும்புகிறேன். ஆனால் இதற்கு முன் நீங்கள் செய்யாததை செய்ய முயற்சிப்பதே சிறந்த விஷயமாகும்”

இதையும் படிங்க: விராட் கோலிய ஸ்லெட்ஜிங் செஞ்சுறாதீங்க அப்றம் உங்கள செஞ்சு விட்டுருவாரு – உலக பவுலர்களுக்கு தெ.ஆ ஜாம்பவான் எச்சரிக்கை

“அதுவே உங்களுடைய பேட்டிங்கில் மற்றொரு திறமையை சேர்க்கும். அதிக ரிஸ்க் எடுத்து விளையாடும் போது சொற்ப ரன்களில் அவுட்டாவேன் என்பதை நானும் அறிவேன். அத்துடன் கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் விளையாடுவதை விட இந்தியாவில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கிறது. இப்போதுள்ள பிட்ச்கள் வெளிநாட்டை விட சவாலாக இருக்கிறது. அதனால் தான் ஒரு அணியாக நாங்கள் ஸ்ட்ரைக் ரேட், சராசரி போன்றவற்றை பார்ப்பதில்லை” என்று கூறினார்.

Advertisement