விராட் கோலிய ஸ்லெட்ஜிங் செஞ்சுறாதீங்க அப்றம் உங்கள செஞ்சு விட்டுருவாரு – உலக பவுலர்களுக்கு தெ.ஆ ஜாம்பவான் எச்சரிக்கை

- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது.

இத்தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் சந்தேகமின்றி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

செஞ்சு விட்ருவாரு:
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் எதிரணி பவுலர்கள் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பதே அவருக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுவதற்கான முதல் வழி என முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் பவுலர் மக்காயா நிடினி தெரிவித்துள்ளார். குறிப்பாக வரலாற்றில் ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்சேல் ஜான்சன் போன்றவர்களை தெறிக்க விட்ட விராட் கோலியிடம் உலகக் கோப்பையில் வாயை விடுவது இறுதியில் உங்களுக்கே ஆபத்தாக முடியும் என்று பவுலர்களை எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்தில் பேசியது பின்வருமாறு.

“ஒரு பவுலராக விராட் கோலியை பற்றி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அவரை திட்டி விடாதீர்கள். பொதுவாகவே எந்த எதிரணி வீரராவது நம்மை சீண்ட மாட்டார்களா அதனால் நாம் வெறித்தனமாக செயல்பட மாட்டோமா என்று அவர் பசியுடன் காத்திருப்பார். எனவே அவரை நீங்கள் தனிமையாக விட்டு தன்னுடைய சொந்த ஆட்டத்தை விளையாடி தவறுகளை செய்ய விட வேண்டும். அப்படி தான் எதிரணிகள் அவரை அவுட் செய்ய முடியும்”

- Advertisement -

“ஏனெனில் எதிரணியினர் தம்மை சீண்டாமல் இருந்தால் அது தான் அவருக்கு கடுப்பாக இருக்கும். எனவே அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். அப்படி செய்தால் அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பீர்கள். மாறாக ஸ்லெட்ஜிங் செய்யாமல் விட்டால் அவரே அலுப்பு தட்டி தவறு செய்வார். குறிப்பாக தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு நான் மீண்டும் சொல்கிறேன் அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள்”

இதையும் படிங்க: வீடியோ : என்னையா டீம்ல எடுக்க மாட்றீங்க. 40 பந்தில் 101 அடித்து வெறித்தனம் காட்டிய வீரர் – விராட் கோலிக்கு மறைமுக சிக்னல்

“ஏனெனில் நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் போது அவர் இன்னும் உத்வேகமடைந்து அபாரமாக செயல்படுவார். எனவே அவருக்கு எதிராக அமைதியாக இருங்கள். மற்ற பேட்ஸ்மேன்களை வம்பிழுப்பது போல அவரிடம் நீங்கள் எதையும் செய்யாதீர்கள். மாறாக அமைதியாக இருந்து அவருக்கு அலுப்பு தட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அதுவே அவரை நீங்கள் அவுட் செய்வதற்கான சிறந்த வழியாகும்” என்று கூறினார்.

Advertisement