இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் தான் அவருக்கு கெடச்ச கடைசி வாய்ப்பு – சீனியர் வீரரை எச்சரித்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணியை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதில் பல வீரர்கள் புது வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Pollard

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சீனியர் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு இதுவே கடைசி வாய்ப்பாக அமையலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய புவனேஷ்வர் குமார் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

இரண்டு போட்டிகளில் விளையாடிய அவரால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. அதே போன்று போட்டிக்கு 60 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்துள்ளார். இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் தீபக் சாஹர் விளையாடினார். அப்படி விளையாடிய அவர் அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அரைசதம் அடித்து அணிக்கு கை கொடுத்திருக்கிறார். இதனால் புவனேஸ்வர் குமார் இடம் தற்போது ஆபத்தில் உள்ளது.

Bhuvi

புவனேஸ்வர் குமார் தனது வேகத்தையும், துல்லியத்தையும் இழந்துவிட்டார். தனது பந்து வீச்சை அவர் மேம்படுத்தி ஆகவேண்டும். மீண்டும் அவர் பழைய நிலைமைக்கு திரும்பினால் மட்டுமே அவரால் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க முடியும். இல்லை என்றால் தீபக் சாகரை இந்திய அணி பயன்படுத்த துவங்கி விடும்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய தொடருக்கு முன்னர் தரமான சம்பவத்தை செய்துள்ள வெ.இண்டீஸ் – ரோஹித் படை சமாளிக்குமா?

தீபக் சாகர் பந்தினை இரண்டு புறமும் ஸ்விங் செய்கிறார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் ஓரளவு கைகொடுக்கும் அவர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் ரெகுலராக மாறிவிடுவார். என்னை பொருத்தவரை புவனேஷ்வர் குமாருக்கு இந்தத் தொடர்தான் கடைசி வாய்ப்பு இந்த தொடரில் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement