- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் சாதனையுடன் சேர்த்து.. ப்ராட்மேனின் இந்த சாதனையையும் கில் உடைக்கனும்.. கவாஸ்கர் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பரிதாபமாக தோற்றது. ஆனால் அதற்கும் சேர்த்து 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த வெற்றிக்கு 269, 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (430) குவித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் (344) சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இந்நிலையில் சாதனைகள் என்றால் ஒருநாள் உடைக்கப்படுவதற்காக படைக்கப்படுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே ஒரு தொடரில் அதிக ரன்கள் (1971இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 774) அடித்த இந்திய வீரர் என்ற தம்முடைய சாதனையை கில் உடைக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் விருப்பம்:

அதையும் தாண்டி ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (1930 ஆஷஸ் தொடரில் 974 ரன்கள்) முந்தி ஒரு டெஸ்ட் தொடரில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கில் படைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “கில் அந்த சாதனைகளை உடைப்பதற்கு தகுதியான போட்டியாளர்”

“எனது சாதனையை லார்ட்ஸ் மைதானத்தில் அவர் உடைப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய டெக்னிக் பார்ப்பதற்கு அதிகமாக இருக்கிறது. தன்னுடைய புத்தகத்தில் அனைத்து ஷாட்டுகளையும் வைத்துள்ள அவர் தன்னுடைய தோளில் அணியை சுமக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார். சாதனைகள் உடைக்கப்படுவதற்காகவே இருக்கிறது”

- Advertisement -

ப்ராட்மேனை முந்துங்க:

“எனவே மற்றுமொரு சாதனையை எஸ்ஜி (சுப்மன் கில்) எடுத்துக்கொண்டால் நான் மகிழ்ச்சியடைவேன். ப்ராட்மேன் சாதனையைத் தாண்டி ஒரு தொடரில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரராக கில் வந்தால் அது உண்மையில் அற்புதமானதாக இருக்கும். அதற்கு இன்னும் அவருக்கு 6 இன்னிங்ஸ் உள்ளது. இப்போதுள்ள ஃபார்முக்கு அவர் சிறப்பாக விளையாடி உடைக்க முடியாத சாதனைகளைப் படைப்பார் என்று நம்பலாம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: என்னாங்க இந்திய பிட்ச் மாதிரி இருக்கு? 2 விக்கெட்ஸ் தானே.. சாக்கு சொன்ன ஸ்டோக்ஸ்.. ஆகாஷ் சோப்ரா கேள்வி

மேலும் கேப்டன்ஷிப் பொறுப்பை சுப்மன் கில் பாரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாடுவதாகவும் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அதே போல புதிய கேப்டனாக அவர் மற்ற வீரர்களுக்கு சுதந்திரக் காற்றைக் கொடுப்பதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே மற்ற கேப்டன்களை பின்பற்றாமல் சுப்மன் கில் தம்முடைய ஸ்டைலில் இப்படியே விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -